ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த நிபுணர் குழு முக்கிய தகவல்..!

தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை, தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த நிபுணர் குழு ஆய்வு செய்தது

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த நிபுணர் குழு முக்கிய தகவல்..!

நிபுணர் குழு ஆய்வு செய்த போது, பெரும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது (கோப்புப் படம்)


Tuticorin: 

தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை, தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த நிபுணர் குழு ஆய்வு செய்தது. மேலும் நிபுணர் குழு, பொது மக்களின் கருத்துகளை கேட்டறிந்தது. 

தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை அரசாணை வெளியிட்டு மூடியுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடியது. இதையடுத்து தான், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியா என்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைத்தது தீர்ப்பாயம். அதன்படி நிபுணர் குழு நேற்று ஸ்டெர்லைட் ஆலைக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டது. 

ஆய்வு செய்ய வந்த நிபுணர் குழுவுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியும், எஸ்.பி முரளி ரம்பாவும் உடனிருந்தனர். குமரிகிரியில் நிபுணர் குழு நீர் மாதிரிகளை எடுத்துக் கொண்டது. அதேபோல குமரட்டியாபுரத்திற்குச் சென்று பொது மக்களுடன் கலந்துரையாடினர் நிபுணர்கள். இந்த ஆய்வின் போது பெரும் அளவிலான காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளுக்காக போடப்பட்டிருந்தனர். 

பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்ட போது, இரு பிரிவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீஸார் தலையிட்டு, நிலைமையை சீராக்கினர். 

பொது மக்களிடம் கருத்து கேட்ட பின்னர் நிபுணர் குழுவின் தலைவரான மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தருண் அகர்வால், ‘பெரும்பான்மையான பொது மக்கள் ஆலையை மூட வேண்டும் என்று தான் கருத்து தெரிவிக்கின்றனர். இது குறித்து மேலும் ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்’ என்று கூறினார். 
 

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................