This Article is From Jan 23, 2019

மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்தில் '13 வெயிட்டர் வேலை': பட்டதாரிகள் உட்பட 7000 பேர் விண்ணப்பம்!

மகாராஷ்டிராவில் 2016 இல் வேலையில்லதவர்களின் எண்ணிக்கை 33.56 இலட்சமாக இருந்தது. அது இப்போது 42.2 இலட்சமாக உயர்ந்துள்ளது.

தலைமை செயலகத்தில் உள்ள வெயிட்டர் வேலைக்கு தான் 7000 பேர் விண்ணப்பித்தனர்

ஹைலைட்ஸ்

  • காங்கிரஸ் கட்சியின் மாலிக் மகாராஷ்டிரா அரசைன் கடுமையாக விமர்சித்தார்
  • ரெயில்வேயில் 63,000 காலியிடங்களுக்கு 19 மில்லியன் பேர் விண்ணப்பித்தனர்
  • மோடியின் அரசு, இதனை மறுத்து உள்ளனர்
Mumbai:

இந்தியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உச்சத்தை அடைந்துள்ளது. அதற்கு சான்று மகாராஷ்டிராவில் நடந்த சம்பவம் தான்.

அங்கு தலைமை செயலகத்தின் காண்டின் வெயிட்டர் வேலைக்கு 7000 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவரிகளில் பலர் பட்டதாரிகள்.

ஆனால் அங்கு வேலைக்கு தேவையோ வெறும் 13 பேர் தான். 13 காலியிடங்களுக்கு 7000 பேர் விண்ணப்பித்துள்ளது அங்கு நிலவும் வேலையில்லா திண்டாத்ததை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இதனை காங்கிரஸ் கட்சியின் நவாப் மாலிக் கடுமையாக விமர்ச்சித்துள்ளார். ‘இது, மகாராஷ்டிரா அரசின் தோல்வியை காட்டுகிறது. அந்த அரசால், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. அதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.

ஆனால், இதனை மகாராஷ்டிராவின் நிதிதுறை அமைச்சரும் பா.ஜ.கா கட்சியை சேர்ந்த சுதிர் முகந்த்வீர் மறுத்துள்ளார். ‘எங்களால் யாரையும் வேலைக்கு விண்ணப்பம் செய்வதில் இருந்து தடுக்க முடியாது. எங்கள் அரசு பல புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொண்டு தான் இருக்கிறது' என்றார்.

மகாராஷ்டிராவில் 2016 இல் வேலையில்லதவர்களின் எண்ணிக்கை 33.56 இலட்சமாக இருந்தது. அது இப்போது 42.2 இலட்சமாக உயர்ந்துள்ளது.

பிரதமர் மோடி அவர்கள் வருடம் ஒன்றுக்கு 2 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அவர் அதில் தோற்று விட்டார் என எதிர்கட்சியினர் விமர்ச்சித்துள்ளனர்.

 

.