"தமிழகத்தில் இந்தி மொழிப்பாடம் கட்டாயமல்ல"; திருத்தப்பட்ட கல்வி வரைவு!

Draft National Education Policy 2019: மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயம் என்ற வரைவு அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தமிழகத்தில் இந்தி மொழிப்பாடம் கட்டாயமல்ல என திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
New Delhi: 

மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயம் என்ற வரைவு அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தமிழகத்தில் இந்தி மொழிப்பாடம் கட்டாயமல்ல என திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக்குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது. இந்த குழுவானது, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது. அந்த, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, மூன்றாவது மொழித்தேர்வு என்பது மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் தாய்மொழியைப் பொறுத்து மூன்றாவது மொழி அமைய வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த வரைவு பொது மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் இந்த வரைவு அறிக்கை குறித்த கருத்தை மத்திய அரசிடம் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக்குகள் உலக அளவில் ட்ரெண்டிங்கில் மூன்றாம் இடத்தை பிடித்தது. இதேபோல், இந்தி திணிப்புக்கு எதிராக கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பதவில், மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும்.

பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே ஒரே பாரதம் உன்னத பாரதம் #EkBharatSreshthaBharat முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்ப்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது.

மேலும், விருப்பத்தின் அடிப்படையில் மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என திருத்தப்பட்ட வரைவுக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் 3-வது மொழியாக இந்தியை கட்டாயமாக பயில வேண்டும் என்பது அவசியமில்லை.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................