This Article is From Sep 30, 2019

TNFUSRC : தமிழ்நாடு வனத்துறை சீருடை பணியாளர் தேர்வு! நாளை வெளியாகிறது ஹால் டிக்கெட்!!

இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி 30 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள்கள் இருக்கும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வு நடக்கிறது. 

TNFUSRC : தமிழ்நாடு வனத்துறை சீருடை பணியாளர் தேர்வு! நாளை வெளியாகிறது ஹால் டிக்கெட்!!

www.forests.tn.gov.in. என்ற இணைய தளத்தில் ஹால் டிக்கெட்டுகள் வெளியாகும்.

New Delhi:

தமிழ்நாடு வனத்துறை சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் வனக்காவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாளை அக்டோபர் 1-ம்தேதி வெளியாக அதிக வாயப்புள்ளது. 

முன்னதாக செப்டம்பர் 30-ம்தேதியான இன்று ஹால்டிக்கெட்டுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக தள்ளிப்போடப்பட்டது. 

இந்த நிலையில் ஹால் டிக்கெட்டுகள் நாளை முதல் அக்டோபர் 6-ம்தேதி வரை https://www.forests.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வனக்காவலர் தேர்வு மூலம் மொத்தம் 564 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முதலில் ஜூன் மாதம் இந்த தேர்வு நடத்தப்படுவதாக இருந்தது. பின்னர், இரு முறை தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டன. 

கணினி முறைப்படி தேர்வை வனத்துறை சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்துகிறது. அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும். 

3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும். தேர்வர்களின் பொது அறிவை சோதிக்கும் வகையில் வினாக்கள் அமையும். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இருக்கும். இதில் 40 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமாக எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். 

இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி 30 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள்கள் இருக்கும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வு நடக்கிறது. 

.