This Article is From May 30, 2020

மோடியின் 2வது ஆட்சிக்காலம்: ”6 ஆண்டுகளும், 60 ஆண்டுகளும்”: காங்கிரஸை சாடிய அமித் ஷா!

Government Anniversary பல சாதனைகளை கண்ட வரலாற்று ஆண்டிற்காக பிரதமர் மோடிக்கு நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

மோடியின் 2வது ஆட்சிக்காலம்: ”6 ஆண்டுகளும், 60 ஆண்டுகளும்”: காங்கிரஸை சாடிய அமித் ஷா!

Government Anniversary: ”6 ஆண்டுகளும், 60 ஆண்டுகளும்”: காங்கிரஸை சாடிய அமித் ஷா!

New Delhi:

கடந்த ஆறு வருடங்களில் பல வரலாற்று பிழைகளை பிரதமர் நரேந்திர மோடி சரி செய்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முதலாவது ஆண்டு நிறைவு தினத்தைக் குறிப்பிட்டு, கோடிக்கணக்கான பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கம், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட அரசின் முக்கிய நடவடிக்கைகளை குறிப்பிட்டு, பல சாதனைகளை கண்ட வரலாற்று ஆண்டிற்காக பிரதமர் மோடிக்கு நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். திறமையான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட தங்களது தலைமையின் கீழ் இந்தியா தொடர்ந்து முன்னேறும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ள அவர், கடந்த 6 வருடங்களில், பிரதமர் மோடி வரலாற்று பிழைகளை மட்டும் சரிசெய்யவில்லை... தற்சார்பு கொண்ட இந்தியாவை உருவாக்க கடந்த 60வது ஆண்டுகளாக உள்ள வெற்றிடத்தையும் அவர் நிரப்பியுள்ளார். கடந்த ஆறு ஆண்டு கால ஆட்சி என்பது, ஏழைகளின் நலனுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது. 

பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களித்த நாட்டு மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். பாஜக தொண்டர்கள் அரசின் சாதனைகள் மற்றும் பொதுநலத் திட்டங்கள் பற்றிய தகவல்களை வீடு வீடாக சென்று பரப்பி வருகின்றனர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில், கட்சியின் சாதனைகள் மற்றும் அதன் பொதுநலத் திட்டங்கள் குறித்து கடந்த ஆறு ஆண்டுகளாக வீடு வீடாகச் சென்று பரப்பி வரும் கடின உழைப்பாளிகளான பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் மகத்தான கடின உழைப்பு மற்றும் தியாகத்திற்காக நான் அவர்களுக்கு முழு மனதுடன் நன்றி கூறுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

பாஜக தலைவராக ஜே.பி.நட்டா தேர்தெடுக்கப்படுவதற்கு முன்பாக 5 வருடங்களாக அமித் ஷா பாஜக தலைவராக பதவி வகித்து வந்தார். 

.