This Article is From Sep 05, 2018

20 ஆண்டுகளுக்கு முன் கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் இன்று

ஒரே ஒரு சேவையுடன் தொடங்கிய கூகுளிடம் இப்போது 7 சேவைகள் உலகம் முழுவதும் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது

20 ஆண்டுகளுக்கு முன் கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் இன்று
San Francisco:

கூகுள் நிறுவனத்துக்கு இன்றுடன் வயது 20. முதன் முதலில் தேடுதல் இயந்திரத்துடன் ஒரு சின்ன கராஜில் 20 ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 4-ம் தேதி தொடங்கப்பட்டது கூகுள் நிறுவனம்.

கூகுள் தொடங்கப்பட்ட நாள் என்ன என்று கேட்டால், உலகத்துக்கே பதில் தரும் அந்நிறுவனம் இரண்டு பதில்களை தருகிறது. செப்டம்பர் 4-ம் தேதி கூகுள் தொடங்கப்பட்ட நாள். ஆனால், நாங்கள் செப்டம்பர் 27-ம் தேதி தான் கூகுளின் பிறந்த நாளாக டூடுல் வெளியிட்டு கொண்டாடுவோம் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

ஒரே ஒரு சேவையுடன் தொடங்கிய கூகுளிடம் இப்போது 7 சேவைகள் உள்ளன. உலகம் முழுவதும் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஊழியர்களுடன் 60 நாடுகளில் கால் பதித்து பரந்து விரிந்திருக்கிறது கூகுள். 2015-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆல்ஃபபெட் என்ற தாய் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது கூகுள் நிறுவனம். 

கூகுளின் 10-வது பிறந்த நாள் அன்று கூகுள் குரோம் பிரவுசரை அறிமுகப்படுத்தியது. தற்போது, தலைமை செயல் அதிகாரி சுந்தர பிச்சையின் தலைமையில் கூகுளின் வருமானம் 26% அதிகரித்து 23.3 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. ஜூன்30-ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் ஆல்ஃபபெட் நிறுவனம், 26.24 பில்லியன் டாலர்களை வருமானமாக பதிவு செய்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட அளவை விட 3.2. பில்லியன் டாலர்களாக அதிகம். 

“செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் உதவும் சேவைகளை வழங்குவதை நோக்கமாக வைத்து உழைத்து வருகிறோம்” என்கிறது கூகுள்.

.