This Article is From Sep 29, 2018

அதிகரிக்கும் கூகுள் ‘தேடுதல்’ குறித்த சர்ச்சை… வெள்ளை மாளிகைக்கு விரைந்த சுந்தர் பிச்சை!

அமெரிக்காவல் மிட்-டெர்ம் தேர்தல்கள் நடக்க உள்ளன

அதிகரிக்கும் கூகுள் ‘தேடுதல்’ குறித்த சர்ச்சை… வெள்ளை மாளிகைக்கு விரைந்த சுந்தர் பிச்சை!

இணையதளத்தில் இருக்கும் சர்ச் இன்ஜின்களில், 90 சதவிதம் தேடுதலுக்கு கூகுள் தான் பயன்படுத்தப்படுகிறது

அமெரிக்காவில் மிட்-டெர்ம் தேர்தல்கள் நடக்க உள்ளன. இதனால் அதிபர் ட்ரம்ப் அங்கமாக இருக்கும் குடியரசுக் கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் இடையில் பிரசாரங்கள் சூடு பிடித்து வருகின்றன. இந்நிலையில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பதிவுகளை கூகுள் வேண்டுமென்றே மட்டுப்படுத்துகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் அமெரிக்க அரசியல் களத்தில் பூதாகரமெடுத்துள்ள நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை வெள்ளை மாளிகைக்கு விசிட் அடித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சில நாட்களுக்கு முன்னர், ‘கூகுள் நிறுவனம், தேடுதலில் பாரபட்சமாக நடந்து கொள்கிறது’ என்று பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்நிலையில் தான் சுந்தர் பிச்சை, வெள்ளை மாளிகைக்கு விசிட் அடித்துள்ளார். 

அங்கு அவர், ட்ரம்பின் பொருளாதார ஆலோசகர்களில் ஒருவரான லாரி குட்லாவை சந்தித்து, சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் இந்த விவகாரம் குறித்து விளக்கியுள்ளார். இருவருடனான சந்திப்பை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவர் உறுதி செய்துள்ளார். 

தனிப்பட்ட முறையில் நடந்த இந்த சந்திப்பில், ‘இணையதளம் மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கும் விஷயங்கள்’ குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. மேலும், சீக்கிரமே அதிபர் ட்ரம்ப் தலைமையிலான வட்டமேசை சந்திப்பில் பங்கேற்பதற்கும் சுந்தர் பிச்சை ஒப்புக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. 

அந்த வட்டமேசை சந்திப்பில், கூகுள் மட்டுமல்லாமல் பிற பெரிய டெக் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகைக்கு வருவதற்கு முன்னர் சுந்தர் பிச்சை, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுடனும் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது மக்கள் பிரதிநிதிகள், ‘சமூக வலைதளங்களில் என்ன நடக்கிறது என்பது குறித்து எங்கள் அனைவருக்கும் பயம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளனர். அதற்கு சுந்தர் பிச்சை, ‘எங்கள் நிறுவனம் யாருடைய தரவுகளையும் சென்சார் செய்யும் நோக்கில் செயல்படவில்லை. எங்கள் தளத்தில் பாரபட்சம் வராத அளவிற்கு நிறைய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்’ என்று விளக்கியதாக கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். 

இணையதளத்தில் இருக்கும் சர்ச் இன்ஜின்களில், 90 சதவீதம் தேடுதலுக்கு கூகுள் தான் பயன்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.