‘என்னய்யா நடக்குது…’- 40,000 வைரக் கற்கள் கொண்டு உருவாக்கப்பட்ட Gold Toilet!

இந்த Gold Toilet குறித்து இணையத்தில் இரு வேறு கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன.

‘என்னய்யா நடக்குது…’- 40,000 வைரக் கற்கள் கொண்டு உருவாக்கப்பட்ட Gold Toilet!

இந்த Gold Toiletன் மதிப்பு சுமார் 9 கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சுமார் 40,000 வைரக் கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தங்க டாய்லெட் (Gold Toilet)… நீங்கள் படிப்பது உண்மைதான். தங்க டாய்லெட்டேதான். இப்படி உருவாக்கப்பட்ட தங்க டாய்லெட் குறித்தான செய்தி இணையத்தைப் புரட்டிப் போட்டுள்ளது. சீனாவின் ஷாங்காயில் நடந்த சர்வதேச ஏற்றுமதி கண்காட்சியில் இந்த ‘பிரத்யேக டாய்லெட்' பார்வைக்கு வைக்கப்பட்டது. ஹாங் காங்கில் உள்ள காரோநெட் ஜுவல்லரி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த டாய்லெட், குண்டு துளைக்க முடியாத சீட் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

டெய்லி மெயில் செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவல்படி, இந்த டாய்லெட்டானது, குண்டு துளைக்காத சீட் உடன், சுமார் 40,815 வைரக் கற்கள் பதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். மொத்தமாக வைரக் கற்களின் மதிப்பு 334.68 காரட் இருக்கும் எனப்படுகிறது. 

இந்த தங்க டாய்லெட்டின் மதிப்பு சுமார் 9 கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த பிரத்யேக டாய்லெட்டை உருவாக்கிய காரோநெட் உரிமையாளர், ஆரோன் ஷும், தனது பொருளை யாராவது வாங்கிவிட்டார்களா என்பது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. மேலும் இந்த டாய்லெட், விற்பனைக்கு அல்ல என்றும் கூறியுள்ளார். 

இந்த தங்க டாய்லெட் குறித்து இணையத்தில் இரு வேறு கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. சிலர், இதை வித்தியாசமான ஒன்று என்றும், தனித்துவமான முயற்சி என்றும் பாராட்டி வருகின்றனர். வேறு சிலரோ, இதெல்லாம் தேவையில்லாதது என்று விமர்சித்து வருகிறார்கள். 
 


 

Click for more trending news


More News