புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.30 ஆயிரத்தை நெருக்குகிறது!

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 29,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.3,680-க்கு விற்பனையாகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.30 ஆயிரத்தை நெருக்குகிறது!

சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 29,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது


சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.29,440-க்கு விற்பனையாகிறது.

முன் எப்போதும் இல்லாத அளவில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 29,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.3,680-க்கு விற்பனையாகிறது. இதையடுத்து, ஆபரண தங்கத்தில் விலை சவரன் ரூ.30,000-த்தை நெருங்குகிறது. 

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும், உலக பொருளாதாரம் சீரான நிலைமையில் இல்லாததுமே, தங்கத்தில் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொடுவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம், பெரிய முதலீட்டாளர்கள் தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்வது கூட காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே, தங்கம் விலை மேலும் உயரும் என தங்க நகை வியாபாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்திற்குள் 30,000-த்தை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.3000 உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சவரன் தங்கம் விலை முதல் முறையாக 25,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 26,000 ரூபாயை தாண்டியது. ஜூலை மாதம் சவரனுக்கு 900 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 27,000 ரூபாயை நெருங்கியது. 

ஆகஸ்ட் முதல் வாரத்தில் 27 ஆயிரத்தைக் தாண்டியது. இதையடுத்து அடுத்த 4 நாட்களில் 28 ஆயிரத்தையும் தாண்டியது. ஆகஸ்ட் 14ம் தேதி 29 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை தற்போது 30,000 ரூபாயை தாண்டும் என தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 49,200 ஆக உள்ளது. ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.49,20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.28,800- ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.3,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................