கோவா அரசின் மொபைல் ஆஃப் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்

சில டாக்ஸி ஓட்டுநர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவே பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கோவா அரசின் மொபைல் ஆஃப் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்

கோவா சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்ப்பாக செயலி அடிப்படையிலான டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தப்பட்டது


Panaji: 

கோவாவில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக சுற்றுலாவாசிக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு மாநில அரசே டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தியிருந்தது.

ஆனால், அரசாங்கத்தில் செயலி மூலம் டாக்ஸி ஓட்டும் ஓட்டுநர்களுக்கும் உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்களுக்கும் அடிக்கடி மோதல் உருவாகிக் கொண்டே இருந்தது. கடந்த வாராம் ‘கோவா மைல்' டாக்ஸி ஓட்டுநரை உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள் சேர்த்து அடித்து வன்முறையில் இறங்கியுள்ளனர்.

இதற்குமுதலமைச்சர் பிரமோத் சாவந்த் சில டாக்ஸி ஓட்டுநர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவே பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 அரசின் இந்த டாக்ஸி சர்வீஸில் அனைவரும் இணைந்து பணியாற்றுங்கள். அரசு வன்முறைக்கு எதிரான பாதுகாப்பைத் தரும் என்று கூறியுள்ளார்.

கோவா சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்ப்பாக செயலி அடிப்படையிலான டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு “கோவா மைல்கள்” என்று பெயரும் சூட்டப்பட்டது. இதற்கு மூத்த டாக்ஸி ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர். பயன்பாட்டு அடிப்படையிலான டாக்ஸி சேவையானது உலகம் முழுவதிலும் பரவலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................