This Article is From Dec 14, 2019

வடகொரியாவுக்கு செல்லுங்கள்: போராட்டக்காரர்களுக்கு சர்ச்சைக்குரிய பதிலை சொன்ன மேகலயா ஆளுநர்

போராட்டக்காரர்கள் பாதுகாப்பை மீறி உள்ளே செல்ல முயன்றனர். அதைதொடர்ந்து காவல்துறை லத்தியடி செய்து கலைத்தனர். கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினர்.

வடகொரியாவுக்கு செல்லுங்கள்: போராட்டக்காரர்களுக்கு சர்ச்சைக்குரிய பதிலை சொன்ன மேகலயா ஆளுநர்

ஜனநாயகத்தில் அவசியமான பிளவு தேவை -மேகலயா ஆளுநர்

Shillong:

வடகொரியாவுக்கு செல்லுங்கள்: போராட்டக்காரர்களுக்கு சர்ச்சைக்குரிய பதிலை சொன்ன மேகலயா ஆளுநர்

மேகலயா ஆளுநர் தாதாகதா ராய் பிளவுபடுத்தும் ஜனநாயகத்தை விரும்பாதவர்கள் வடகொரியா செல்லுங்கள் என்று கூறி சர்ச்சசையை கிளப்பியுள்ளனர்.

ஜனநாயகத்தில் அவசியமான பிளவு தேவை, நீங்கள் விரும்பவில்லை என்றால் அது வடகொரியாவுக்கு செல்லுங்கள் என்று தாதாகதா ராய் சர்ச்சையான ட்விட் பதிவினை பதிவிட்டுள்ளார். 

ட்விட் பதிவில் “சர்ச்சையான தற்போதைய சூழலில் இரண்டு விஷயங்களை ஒருபோதும் இழக்கக்கூடாது. 1. நாடு ஒரு காலத்தில் மதத்தின் பெயரால் பிளவுபட்டது. 2. ஜனநாயகம் என்பது அவசியமான பிளவு கொண்டது. நீங்கள் விரும்பவில்லை என்றால் வடகொரியாவுக்கு செல்லுங்கள்” என்று ட்விட் செய்திருந்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ராஜ்பவனை அடைவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் இந்த ட்வீட் பதிவு போடப்பட்டது. போராட்டக்காரர்கள் பாதுகாப்பை மீறி உள்ளே செல்ல முயன்றனர். அதைதொடர்ந்து காவல்துறை லத்தியடி செய்து கலைத்தனர். கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினர்.

இந்த மோதலில் இரண்டு காவல்துறையினர் காயமடைந்தனர்.
 

.