
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பருவநிலை மாற்றத்துக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பருவநிலை மாற்றத்துக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார். தற்போது மீண்டும் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார். இப்போது அது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.
" 'பியூட்டிஃபுல் மிட்வெஸ்ட்' (Beautiful Midwest) என்ற அழகான பனிக்காலம் அமெரிக்காவில் நிகழ்வதால், மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் வரை சென்றுள்ளது. மக்கள் நடமாட முடியாத இடமாக மாறியுள்ளது. அதனால் உலக வெப்பமயமாதலை வரவேற்கிறோம். சீக்கிரம் வந்து இந்த நிலையை சரிசெய்யட்டும்" என்று ட்விட் செய்தது சர்ச்சையாகியுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப், இந்த ட்விட்டை சில நிமிடத்தில் நீக்கியிருந்தாலும் ட்விட்டரில் அவரை வறுத்தெடுத்தனர். "உங்களுக்கு உண்மையாலுமே உலக வெப்பமயமாதல் பற்றி தெரியுமா? புத்தகம் படித்திருக்கிறீர்களா" என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.
"இதுபோன்ற அதிபரை இனி ஒருபோதும் அமெரிக்கா ஏற்கக்கூடாது" என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சிலர் பருவநிலை மாற்றம் என்றால் என்னவென்றெல்லாம் ட்ரம்புக்கு வகுபெடுத்தனர்.
Are you really this ignorant about climate change? Have you never read a book in your life?
— Ed Krassenstein (@EdKrassen) 29 January 2019
We will never again see a President like this. I intend to enjoy his presidency to the fullest.
— Chad (@Typhus369) 29 January 2019
"2012ல் ட்ரம்ப் பருவநிலை மாற்றமெல்லாம் சீனர்கள் கூறிய பொய். அமெரிக்காவுடனான உற்பத்தி போட்டிக்கு சீனாவின் உத்தி" என்று விமர்சித்ததும் சர்ச்சையானது.
ட்ரம்ப், உலகின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகமாகமல் இருக்க வேண்டும் என்ற அறிக்கையையும் எதிர்த்தார்.
தொழிற்சாலைகளால் அதிகம் காலநிலையை மாற்றுவதில் அமெரிக்காவின் பங்கு பெரியது என்பதை அறிக்கைகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.