சிறுத்தையிடம் சிக்கிய தம்பியை காப்பாற்றிய சிறுமி: படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

கடந்த அக்.4ம் தேதியன்று இந்த சம்பவம் நிகழ்ந்தது. சிறுமி ராக்கியும் அவளது சகோதரனும் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சிறுத்தை சிறுவனை தாக்க தொடங்கியுள்ளது. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
சிறுத்தையிடம் சிக்கிய தம்பியை காப்பாற்றிய சிறுமி: படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

பயந்து ஓடாத சிறுமி தனது சகோதரனை காப்பாற்ற துணிச்சலுடன் செயல்பட்டுள்ளார்.. (Representational)


Pauri: 

11 வயது சிறுமி ஒருவர் சிறுத்தையிடம் சிக்கிய தனது தம்பியை துணிச்சலுடன் செயல்பட்டு காப்பாற்றியுள்ளார். எனினும், இதில் அந்த சிறுமி படுகாயமடைந்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் அத்தை மதுதேவி கூறும்போது, கடந்த அக்.4ம் தேதியன்று இந்த சம்பவம் நிகழ்ந்தது. சிறுமி ராக்கியும் அவளது சகோதரனும் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சிறுத்தை சிறுவனை தாக்க தொடங்கியுள்ளது. 

அந்த நேரத்தில், பயந்து ஓடாத சிறுமி தனது சகோதரனை காப்பாற்ற துணிச்சலுடன் செயல்பட்டுள்ளார். தனது தம்பியை காக்க சிறுவன் மீது அவர் பாய்ந்து விழுந்துள்ளார். இதன் மூலம் சிறுத்தையிடம் இருந்து சகோதரனை பத்திரமாக பாதுகாத்துள்ளார். எனினும், சிறுமிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று மதுதேவி தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு கிராமவாசிகள் விரைந்து வந்து சிறுத்தையை காட்டிற்குள் விரட்டியுள்ளனர். பின்னர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சிறுமி, படுகாயம் காரணமாக அங்கிருந்து உயர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

சிறுமியின் குடும்பத்தினர் அவரை டெல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், அதிகாரிகள் சிறுமியை திருப்பி அனுப்பியுள்ளனர். 

இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து உத்தரகாண்ட் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களது தலையீட்டால், சிறுமி அக்.7ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தற்போது அபாய கட்டத்தை தாண்டிய சிறுமி, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் திரிவேந்திர சிங், சிறுமியின் குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். மேலும், அவர்களுக்கு உதவி அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். 

இதனிடையே, முதல்கட்டமாக சிறுமியின் மருத்துவ செலவுகளுக்காக ரூ.1 லட்சம் நிதியுதவியை அரசு வழங்கியுள்ளது. மேலும், செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................