This Article is From Aug 09, 2019

வௌவாலை வேட்டையாடிய ராட்சத சிலந்தி!! வைரலாகும் புகைப்படம்!

ராட்சத சிலந்தி வௌவாலை பிடித்து வைத்திருக்கும் காட்சி அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இணையத்தில் மக்கள் ஆச்சர்யத்துடன் கமென்ட் செய்து வருகின்றனர்.

வௌவாலை வேட்டையாடிய ராட்சத சிலந்தி!! வைரலாகும் புகைப்படம்!

ராட்சத சிலந்தியும், வேட்டையாடப்பட்ட வௌவாலும்.

சிலந்தி வகைகளில் பிரமாண்ட உருவ அமைப்பு கொண்ட சிலந்தி ஒன்று வௌவாலை கொன்றுள்ளது. அதனை தனது வலைக்குள் வைத்திருக்கும் புகைப்படம் வலை தளங்களில் லைக்குகளை குவித்து வருகிறது. 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போடீட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு அன்னிட் அலானிஸ் என்பவர்தான் ராட்சத சிலந்தியின் வேட்டையை நேரில் பார்த்துள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். 

தனது வேலையை முடித்து விட்டு மாலையில் வீட்டிற்கு வரும் வழியில் இந்த காட்சி தென்பட்டுள்ளது. இதையடுத்து மொபைலில் க்ளிக்கிய அன்னிட் அதனை ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்துள்ளார். இந்த ஃபோட்டோ லைக் ஷேரை குவித்து வருகிறது. 

இந்த தகவலை ஏபிசி செய்தி நிறுவனம் வெளியிட உலகம் முழுவதும் இந்த காட்சி விவாதத்தை கிளப்பியது. இதுகுறித்து விளக்கம் அளித்த உயிரியல் வல்லுனர் மேட் பெர்டோன், இது ஆர்ஜியோப் ஆரன்டியா வகையை சேர்ந்த சிலந்தி என்றும், அது அதனை விட பெரிய உயிரினங்களை வேட்டையா சாப்பிடும் என்றும் தெரிவித்தார். 

.