கார் போனட்டில் தொற்றியபடியே 2 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட நபர்; டெல்லியில் பரபரப்பு!

புது டெல்லி அருகேயுள்ள காசியாபாத்தில், கார் போனட்டில் தொற்றியபடியே ஒரு நபர் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கார் போனட்டில் தொற்றியபடியே 2 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட நபர்; டெல்லியில் பரபரப்பு!

வீடியோவில், காசியாபாத்தின் மிகவும் வாகன நெரிசல் இருக்கும் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரிகிறது


Ghaziabad: 

புது டெல்லி அருகேயுள்ள காசியாபாத்தில், கார் போனட்டில் தொற்றியபடியே ஒரு நபர் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. 

வீடியோவில், காசியாபாத்தின் மிகவும் வாகன நெரிசல் இருக்கும் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரிகிறது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு காரை ஓட்டிய பின்னர், இன்னொரு வாகனத்தால் அது நிறுத்தப்படுகிறது. உடனே போனட்டில் இருந்து கீழே இறங்கிய நபர், கார் ஓட்டுநரை வெளியே வரச் சொல்லி வாகனத்தின் கண்ணாடியை தட்டுகிறார். சுற்றி இருந்தவர்களும் ஓட்டுநரை கீழே இறங்கச் சொல்லி கத்தினர். 

ஒருவர் உள்ளூர் காவல் துறைக்கு மொபைல் மூலம் அழைப்பு விடுக்கிறார். இதையடுத்து, கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.  


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................