CAA போராட்டத்தில் பங்கேற்றதால் திருப்பி அனுப்பப்பட்ட German IIT மாணவர்; உருக்கமான மெஸேஜ்!

Jacob மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பேசியுள்ள ப.சிதம்பரம், “உலக வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கம்,” என்று கண்டித்துள்ளார். 

CAA போராட்டத்தில் பங்கேற்றதால் திருப்பி அனுப்பப்பட்ட German IIT மாணவர்; உருக்கமான மெஸேஜ்!

போராட்டத்தில் கலந்து கொண்டது, Jakob Lindenthal-க்கு வழங்கப்பட்ட விசா விதிமுறைகளுக்கு எதிரானது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

ஹைலைட்ஸ்

  • திங்கட் கிழமை Jacob திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார்
  • Jakob Lindenthal, முகநூல் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்
  • விசா நடைமுறைகளுக்கு எதிராக Jacob நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு
New Delhi:

Jakob Lindenthal என்னும் ஜெர்மனைச் சேர்ந்த மாணவர், சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பயின்று வந்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய காரணத்திற்காக அவர் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பகீர் கிளப்பும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் Jakob Lindenthal, நாடு திரும்பிய பின்னர் முதன்முறையாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

Jakob Lindenthal, சென்னை, ஐஐடி கல்வி நிறுவனத்தில் இயற்பியல் துறையில் முதுகலை படித்து வந்துள்ளார். அவர், கடந்த திங்கட் கிழமை ஆம்ஸ்டர்டாமுக்குப் புறப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, Jakob Lindenthal-க்கு தன் சொந்த நாட்டுக்குச் செல்லுமாறு வாய் வார்த்தையாக உத்தரவு போடப்பட்டதாம்.

Jakob Lindenthal, சிஏஏ-வுக்கு எதிரான பல போராட்டங்களில் கலந்து கொண்ட படங்கள் சென்ற வாரம் வெளியாயின. ஒரு போராட்டத்தில் Jakob Lindenthal, “சீருடை அணிந்த கிரிமினல்கள் கிரிமினல்களே” என்ற பதாகையை வைத்திருந்தார். இன்னொரு பதாகையில் அவர், “1933-1945 வரை இதைப் போல விவகாரம் ஜெர்மனியில் நடந்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். 

இப்படி போராட்டத்தில் கலந்து கொண்டது, Jakob Lindenthal-க்கு வழங்கப்பட்ட விசா விதிமுறைகளுக்கு எதிரானது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

Jakob Lindenthal-ஐ மீண்டும் ஜெர்மனிக்கு அனுப்பும் முடிவை எடுத்தது ஐஐடி நிர்வாகமா அல்லது அரசா என்பதில் இன்னும் தெளிவில்லை. இது குறித்து ஐஐடி-ஐச் சேர்ந்த மாணவர்கள், ‘இது வெட்கக் கேடானது' என்று விமர்சித்துள்ளனர். ஐஐடி நிர்வாகம், NDTV-யிடம் இது குறித்து விளக்கம் அளிக்க மறுத்துவிட்டது.

CAA-வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட Jakob Lindenthal

இந்நிலையில் தனது முகநூல் பக்கம் மூலம் பேசியுள்ள Jacob, “ஆம்ஸ்டர்டாமுக்கு வந்துவிட்டேன். எனக்காக துணை நின்ற அனைவருக்கும் நன்றி. உங்கள் கருத்துகளுக்கும், சட்ட ரீதியான ஆலோசனைகளுக்கும், எனது விமானம் தாமதான போது தங்குமிடம் அளித்தமைக்கும் மிக்க நன்றி. இன்னும் சில நாட்களில் என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவெடுப்பேன்.

இப்போது நடந்துள்ள சம்பவங்கள் என்னுடன் சம்பந்தப்பட்டதில்லை. அரசியல் சுதந்திரம் மற்றும் சட்டத்தைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியுள்ளது. இன்னும் பல லட்சம் பேர் இதற்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். என்ஆர்சி மற்றும் சிஏஏவுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராடும் மக்களிடம் தலை வணங்குகிறேன்,” என்று உருக்கமாக கருத்திட்டுள்ளார். 

முடிவாக Jacob, “சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்கள், கருத்து சுதந்திரத்துக்கும் மனித உரிமைகளுக்கும் குரல் கொடுப்பவர்களை ஒன்றிணைக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து உங்களோடு துணை இருக்க வழியைக் கண்டடைவேன்,” என்று நம்பிக்கைத் ததும்பும் வார்த்தைகளோடு முடித்துள்ளார். 

Jacob மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பேசியுள்ள ப.சிதம்பரம், “உலக வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கம்,” என்று கண்டித்துள்ளார். 

மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திருத்திற்கு, ‘இந்திய அளவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்' மிகப் பெரும் எதிர்ப்பு இருப்பதாக சொல்கிறது காங்கிரஸ். 

அதே நேரத்தில் இந்தக் குற்றச்சாடுகளை மறுக்கும் மத்திய அரசு தரப்பு, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து மத ஒடுக்குமுறையால் வெளியேறும் அந்நாட்டுச் சிறுபான்மையினருக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பை வழங்கும் என்கிறது. இந்திய சட்ட சாசனத்தின் மதச்சார்பின்மை இந்தச் சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் சட்டத்தை விமர்சிப்பவர்கள். 

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் ஜாமியா மலியா பல்கலைக்கழகம் மற்றும் உபியின் ஆலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அந்தப் போராட்டத்தை போலீஸ் அராஜகத்தைக் கட்டிவிழ்த்து விட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் பல கல்வி நிறுவனங்களில் போராட்டம் வெடித்தது.

Listen to the latest songs, only on JioSaavn.com