10% இட ஒதுக்கீடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டத்தொடர் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு!

பொதுப் பிரிவினர் இட ஒதுக்கீடு, தொடர்பான அரசியலமைப்பு திருத்தம் மசோதா நிறைவேற்ற ராஜ்யசபாவின் குளிர்கால கூட்டத்தொடர் வரும், புதன்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
10% இட ஒதுக்கீடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டத்தொடர் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு!

குளிர்கால கூட்டத்தொடர் புதன்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


New Delhi: 

பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் உயர்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு திருத்தம் மசோதா நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் உயர்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் மத்திய அரசு விரைவில் திருத்தம் கொண்டு வரவுள்ளது.

மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் செய்யக்கோரும் மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடியாக மத்திய அரசுப்பணிக்கு தேர்வு செய்யப்படுதல் மற்றும் உயர் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாஜகவின் வழிகாட்டியாக செயல்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆலோசனைப்படியே இந்த நடவடிக்கையை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல்களில் பாஜக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸிடம் பாஜக ஆட்சியை இழந்தது. இந்த சூழலில் தான் பொருளாதாரத்தின் பின் தங்கியிருக்கும் உயர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது.

இந்நிலையில், நாளையுடன் நாடாளுமன்ற கூட்டம் முடிவடைய இருந்த நிலையில் குளிர்கால கூட்டத்தொடரை இதற்காக வரும் 9ஆம் தேதி வரை நீட்டிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................