This Article is From Sep 21, 2018

GATE 2019 தேர்வுக்கான ஆன்லைன் பதிவுகள் முடிவடைந்தது

விண்ணப்பத்தை gate.iitm.ac.in.என்ற இணைய தளத்தில் தேர்வர்கள் அளிக்கலாம்.

GATE 2019 தேர்வுக்கான ஆன்லைன் பதிவுகள் முடிவடைந்தது

தேர்வர்களின் வசதிக்காக GATE 2019 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

GATE 2019 தேர்வுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்வது இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இனி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தாமத கட்டணத்துடன் அக்டோபர் 1-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை ஐ.ஐ.டி. மெட்ராஸ் வரும் பிப்ரவரி 2,3,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் காலை மற்றும் மதியம் என இருவேளைகளில் நடத்துகிறது. GATE 2019 தேர்வின் முடிவுகள் அடுத்த ஆண்டு மார்ச் 16-ம்தேதி அறிவிக்கப்படும்.

g42puma

GATE 2019 தேர்வு கட்டண விவரம்

விண்ணப்பத்தை gate.iitm.ac.in.என்ற இணைய தளத்தில் தேர்வர்கள் அளிக்கலாம். appsgate.iitm.ac.in என்ற இணைய தளத்தில் தேர்வுக் கட்டணத்தை செலுத்தவும், அட்மிட் கார்டை டவுண்லோட் செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் statistics பாடம் GATE தேர்வில் இணைக்கப்பட்டுள்ளது. Calculus, Linear Algebra, Probability, Stochastic Processes, Inference, Regression Analysis, Multivariate Analysis and Design of experiments ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படலாம். மொத்தம் 24 பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.சி.எஸ்., கல்வி நிறுவனங்களில் எம்.டெக்., பி.எச்.டி பாடப் பிரிவுகளில் சேர்வதற்காக GATE தேர்வு நடத்தப்படுகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான தகுதி என்பதோடு பொதுத்துறை நிறுவன தேர்வுகளுக்கும் GATE தேர்வு உதவுகிறது.

.