2019-ம் ஆண்டு கேட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது

2019-ம் ஆண்டு கேட் தேர்வுகளுக்கான அறிவிப்பை, ஐ.ஐ.டி மெட்ராஸ் இன்று வெளியிட்டது

 Share
EMAIL
PRINT
COMMENTS
2019-ம் ஆண்டு கேட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது
New Delhi: 

2019-ம் ஆண்டு கேட் தேர்வுகளுக்கான அறிவிப்பை, ஐ.ஐ.டி மெட்ராஸ் இன்று வெளியிட்டது. 2019-ம் ஆண்டு ஃபிப்ரவரி 2,3,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. 2018 செப்டம்பர் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள், குறிப்பிட்ட சில தகுதிகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் கேட் தேர்வு எழுதலாம்.

இந்தியாவில் சில நகரங்களிலும், அடிஸ் அப்பா (எத்தியோபியா), கொலம்போ (இலங்கை), தாக்கா (வங்கதேசம்), துபாய், காத்மாண்டு(நேபாள்) மற்றும் சிங்கப்பூரிலும் இந்த தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Gate.iitm.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கேட் 2019-ம் ஆண்டுக்கான தேர்வு கட்டணம் 1500 ரூபாய். கூடுதல் அவகாசத்தில் கட்டணம் செலுத்த 2000 ரூபாய். 2019 மார்ச் 16-ம் தேதி, முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தேர்வில் புள்ளியியல் பாடம் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................