காந்தி ஜெயந்தி: பிளாஸ்டிக் பையை பெற்றுக் கொண்டு துணிப்பையை மக்களுக்கு வழங்கிய போலீஸ்!!

பிளாஸ்டிக் பைகளின் தடிமன் 50 மைக்ரானுக்கு குறைவாக இருந்தால் அவை மக்காது. அவை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலத்திலேயே மக்காமல் இருந்து சுற்றுச் சூழலுக்கு மாசை ஏற்படுத்தும்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
காந்தி ஜெயந்தி: பிளாஸ்டிக் பையை பெற்றுக் கொண்டு துணிப்பையை மக்களுக்கு வழங்கிய போலீஸ்!!

பல்வேறு மாநிலங்களில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.


New Delhi: 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் போலீசார் மக்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகளை பெற்றுக் கொண்டு, அவர்களிடம் துணிப்பைகளை வழங்கினர். போலீசாரின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. 

காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன. 

கடந்த 2014-ல் இதே தினத்தன்றுதான் பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டம் வரவேற்பையும், வெற்றியையும் பெற்று வரும் நிலையில் ஐ.நா.சபையில் பேசிய மோடி உலக நாடுகள் அனைத்தும் இதுபோன்ற திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பிளாஸ்டிக் கட்டுப்பாடு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தனியார் தொண்டு நிறுவனங்களும் இந்த முயற்சியில் இறங்கி வருவதால் இன்னும் சில ஆண்டுகளில் பிளாஸ்டிக் உபயோகம் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் காந்தி ஜெயந்தியான இன்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டெல்லி போலீசார் பிளாஸ்டிக் பைகளை பெற்றுக் கொண்டு, துணிப் பைகளை வழங்கினர். 

இதன்படி, ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீசார் தங்களது வாகனத்தில் துணிப் பைகளை வைத்துக் கொள்வார்கள். ரோந்தின்போது யாரேனும் பிளாஸ்டிக் பையை வைத்திருந்தால், அவர்களிடம் அதனைப்பெற்றுக் கொண்டு துணிப்பையை வழங்குவார்கள். 

பிளாஸ்டிக் பைகளின் தடிமன் 50 மைக்ரானுக்கு குறைவாக இருந்தால் அவை மக்காது. அவை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலத்திலேயே மக்காமல் இருந்து சுற்றுச் சூழலுக்கு மாசை ஏற்படுத்தும். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................