கேம் ஆஃப் த்ரோன்ஸ் 8, 3வது எபிசோட்: வொயிட் வாக்கர்ஸும் டிராகனும் என்ன செய்ய காத்திருக்கிறது...?

இந்த சீசனின் தொடக்கத்தில் ஜான் ஸ்னோ ஆட்சி அதிகார பீடத்திற்கு விரும்பவில்லையென்றான் நைட் வாக்கர்ஸை அழிப்பதற்காகவே ஒன்று சேர்ந்ததாக கூறுகிறான்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கேம் ஆஃப் த்ரோன்ஸ் 8, 3வது எபிசோட்: வொயிட் வாக்கர்ஸும் டிராகனும் என்ன செய்ய காத்திருக்கிறது...?

கேம் ஆஃப் த்ரோன்ஸ் படக்காட்சி (Image courtesy: YouTube)


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. இந்தப் போரில் டிராகன் அதிகம் பயன்படுத்தப்படும்
  2. டேனெரியஸ்க்கும் ஜான் ஸ்னோவுக்கும் இடையே மனத்தாங்கல் உருவாகிறது
  3. 3வது எபிசோட் போர்க்காட்சிகள் நிறைந்ததாக இருக்கும்

உலகமெங்கும்  கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடருக்கு பிரத்யேக ரசிகர் கூட்டம் இருக்கவே செய்யும். இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனிப்பட்ட வகையில் ரசிக பட்டாளங்கள் இருக்கவே செய்கிறது. தொடரை பெருமளவில் காத்திருந்து ரசிகர்கள் பார்க்க மறுபுறம் பைரைட்ஸ் மூலமாக சட்டவிரோதமான முறையில் அதிகம் டவுண்லோட் செய்யப்படும் தொடரும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் மட்டுமே.. ஆட்சி அதிகாரத்தை யார் கைப்பற்றுவார்கள் என்பதை இந்த இறுதி சீசனில் தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இந்த தொடரைப் பார்த்து வருகின்றனர். பலவகையான ஆட்சி பீடங்கள் இருந்த நிலையில்  ‘மதர் ஆஃப் டிராகன்' டெனேரியஸ் டார்கேரியன் அதன் பெரும்பான்மையை கைபற்றியிருக்கிறாள்.  வடக்கு தேச அரசனின் மகனான ஜான் ஸ்னோவிற்கு படை பலம் தேவையென்ற நிலையில் இருவரும் காதலினால்  கைகோர்த்து நிற்கின்றனர். இவர்கள் ஒருபுறம் இருக்க… மனிதர்களை அழித்து தன் ஆட்சியை நிலை நிறுத்த நைட் கிங்கான வொயிட் வாக்கர்ஸ் விரும்புகிறான். இந்த இருவருக்கும் இடையேயான போர்தான் இறுதிக்கட்டமாக உள்ளது.

இன்று 8வது சீசனின் 3வது பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் “நைட் கிங்க் இஸ் கமிங்க்” என்று ஜான் ஸ்னோவின் குரல் கேட்கிறது. சில நொடிகளில் ‘டெட் இஸ் ஹியர்' (மரணம் இங்குதான் இருக்கிறது) என்று டெனேரியஸ் டார்கேரியன் கூறுகிறாள்.  இப்படியாக போரின் தொடக்கமானது எங்கிருந்து நிகழப் போகிறது என்பதை சஸ்பென்ஸாக வைத்தபடி இந்த ட் ரெய்லர் வெளியாகியுள்ளது. 

இந்த சீசனின் தொடக்கத்தில் ஜான் ஸ்னோ ஆட்சி அதிகார பீடத்திற்கு விரும்பவில்லையென்றான் நைட் வாக்கர்ஸை அழிப்பதற்காகவே ஒன்று சேர்ந்ததாக கூறுகிறான். இதற்கிடையில் ஜான் ஸ்னோவிற்கும் டெனேரியஸ் டார்கேரியனுக்கும் இடையே உள்ள காதலையும் சொல்லியிருந்தனர். 

பலவிதமான சுவாரஸ்யமான திருப்பங்களுடன் கேம் ஆஃப் த்ரோன்ஸின் ட் ரெய்லர் வெளியாகியுள்ளது. இதன் ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம். 

I

Watch this space for more updates on Game Of Thrones 8.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................