‘தாஜ்மஹாலை’ பாதுகாப்பதற்காக அதிகரிக்கிறது நுழைவுக் கட்டணம்!

உலக அதிசயங்களில் ஒன்றான ‘தாஜ் மஹால்’-யை பார்த்து ரசிப்பதற்கான பழைய நுழைவு கட்டணமான ரூ 50 - 200 ஆக கூட்ட புதிய நடவடிக்கை .

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘தாஜ்மஹாலை’ பாதுகாப்பதற்காக அதிகரிக்கிறது நுழைவுக் கட்டணம்!
Agra: 

இன்று முதல் அமலுக்கு வருகிற கட்டண தொகையின் விபரங்கள் ‘உள்நாட்டு பயணிகள் என்றால் ரூபாய் 250-ம் வசுலிக்கப்படும், வெளிநாட்டு பயணிகள் என்றால் ரூபாய் 1,300 செலுத்த வேண்டியதிருக்கும், (சார்க்) சவுத் ஏசியன் அசோசியேஷன் ஆப் ரீஜனல் கோ ஆப்ரேஷன் நாடுகளை சேர்ந்த பார்வையாளர்களுக்கு ரூபாய் 740 வசூலிகப்பட உள்ளது' என இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் தலைமை அதிகாரி வசந்த சுவர்ணாகார் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் ‘இந்த புதிய டிக்கெட் விலை அதிகரிப்பால் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் இப்பழமை வாய்ந்த கட்டிடத்திற்க்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என எண்ணுகிறோம்.

அதுபோல் ரூபாய் 50 மதிப்புள்ள டிக்கெட்டும் உள்ளது ஆனால் அதைக்கொண்டு தாஜ்மகாலை சுற்றியும் மற்றும் யமுனை நதியின் அழகை நம்மால் ரசிக்க முடியும்.

தாஜ்மகாலின் உள்ளே செல்ல முடியாது' என இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் தலைமை அதிகாரி வசந்த சுவர்ணாகார் கூறினார்.


1983-களில் யுனேஸ்கோ வேர்ல்டு ஹெரிடேஜ் சைட் தாஜ் மஹாலை ‘ தீ ஜூவல் ஆப் முஸ்லீம் ஆர்ட் இன் இந்தியா' என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................