This Article is From Nov 13, 2018

பிரிட்டனில் பயிற்சி விமானத்தில் தப்பிய மோசடியாளர் கைது!

சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற காரணத்திற்க்காக யூ.கே. நீதிமன்றம் அவருக்கு கூடுதலாக 6 மாதங்கள் தண்டனை அளித்துள்ளது

பிரிட்டனில் பயிற்சி விமானத்தில் தப்பிய மோசடியாளர் கைது!

பிரிட்ட‌னைச் சேர்ந்த மோசடியாளர் ஒருவர் விமானம் ஓட்டும் பயிற்சியின் போது பயிற்சியாளரிடம் தன்னை ஃபிரான்சில் இறக்கிவிட வலியுறுத்தினார்.

தீ சன் பத்திரிக்கையின் படி ஜெமி கொல்வெல்லும் அவரது தந்தையான பிரையன் கொல்வெல்லின் மீதும் சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் (93,40,28,442.75 இந்திய ரூபாய் மதிப்பு) வேட் ஊழலில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்டனர். இன்னிலையில் ஜாமீனில் வெளிவந்த 51- வயது ஜெமி கொல்வெல் சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற காரணத்திற்க்காக யூ.கே. நீதிமன்றம் அவருக்கு கூடுதலாக 6 மாதங்கள் தண்டனை அளித்துள்ளது.

இதுவே அவர் தப்பிக்க ஒரு காரணமாக இருக்கலாம் என எதிர்பாக்கப்படுகிறது.

மேலும்,ஜெமி தனது தந்தையை பிரான்ஸ்க்கு தனது புதிய பார்ஷ்ஷே காரில் ஓட்டுனருடன் அனுப்பிய‌தாக தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் தனது தந்தையின் பெயரை பயன்படுத்தி கேன்டில் உள்ள பறக்கும் பயிற்ச்சியில் சேர்ந்தார்.

விமானம் பிரான்ஸ் வான்பகுதி அருகே பறக்கும் போது, ஜெமி பயிற்ச்சியாளரை தன்னை பாஸ்-தீ-காலாஸ் என்னும் இறக்கி விட வலியுறுத்தினார். அங்கு இறங்கிய பின்னர் தனது தந்தையுடன் ஸ்பெயினுக்கு தப்பினார்.

கடந்த மே மாதம் அவர்களை பிடித்த போலீசார் அவர்களை லண்டனுக்கு கொண்டு வந்தனர். நீதிமன்றம் இருவருக்கும் 5 வருடம் 3 மாதங்களுக்கு சிறைத் தண்டனை விதித்தது.

Click for more trending news


.