முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ புஷ் காலமானார்!

Former US President George HW Bush : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபள்யூ புஷ், இன்று காலமானதாக, அவரது குடும்பம் தகவல் தெரிவித்துள்ளது

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ புஷ் காலமானார்!

George Bush Sr Death: ஜார்ஜ் ஹெச்.டபள்யூ புஷ்ஷின் வயது 94

Washington:

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ புஷ், இன்று காலமானதாக, அவரது குடும்பம் தகவல் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 94.

இது குறித்து ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ புஷ்ஷின் மகனும் அமெரிக்க முன்னாள் அதிபருமான ஜார்ஜ் டபுள்யூ புஷ், ட்விட்டர் மூலம் தெரிவிக்கையில், ‘நான், ஜெப், நீல், மார்வின், டோரா மற்றும் நான், 94 ஆண்டு கால பெரு வாழ்வை முடித்துக் கொண்டார் என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

அவரது ட்வீட்டில் மேலும், ‘ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ புஷ், மிகவும் மாண்போடும் மரியாதையோடும் வாழ்க்கையை வாழ்ந்தவர். எங்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த அப்பா அவர்' என்று தெரிவித்துள்ளார்.

More News