‘ஊடகத்தைச் சந்திக்க அஞ்சியதில்லை!’ - மோடியைத் தாக்கும் மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் (Manmohan Singh), தான் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு அஞ்சியதில்லை என்று கூறி, பிரதமர் மோடியை (PM Modi) விமர்சித்துள்ளார்

New Delhi:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (Manmohan Singh) , தான் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு அஞ்சியதில்லை என்று கூறி, பிரதமர் மோடியை (PM Modi) விமர்சித்துள்ளார். மேலும் அவர், ‘மோடி, பத்திரிகையாளர்கள் சந்திப்பைத் தொடர்ந்து தவிர்த்து வருகிறார்' என்று குற்றம் சாட்டினார்.

புது டெல்லியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட மன்மோகன் சிங், ‘மக்கள், நான் பிரதமராக இருந்த போது, மிகவும் அமைதியாக இருந்தேன் என்று கூறுகின்றனர். ஆனால், ஊடகங்களைச் சந்திக்க நான் என்றும் அஞ்சியதில்லை. நான் பிரதமராக இருந்தபோது தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து வந்தேன். அதேபோல, ஒவ்வொரு முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட பிறகும் நான் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினேன். ஆனால், தற்போதைய பிரதமர் மோடி (PM Mod) , ஊடகங்களை தொடர்ந்து தவிர்த்து வருகிறார்' என்று கூறினார்.

பிரதமர் மோடி(PM Modi), 2014 ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு, இதுவரை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு கூட அழைப்பு விடுத்ததில்லை. இது பல்வேறு அரசியல் கட்சிகளால் தொடர்ந்து விமர்சனம் செய்து வரப்படுகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரம் குறித்து, ‘என்றாவது ஒரு நாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிப் பாருங்கள். உங்களை நோக்கி, கேள்விகள் கேட்கப்பட்டால் அது ஒரு வித மகிழ்ச்சியைத் தரும்' என்று தொடர்ந்து கேலி செய்யும் விதத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்.

மன்மோகன் சிங் (Manmohan Singh) , தான் பிரதமராக இருந்த காலக்கட்டம் குறித்து பேசுகையில், ‘நான் பதவியிலிருந்த போது, பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தன. எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை. இந்த நாடு, என் மீது மிகவும் கரிசனத்துடன் இருக்கிறது. அதற்கு நான் என்ன செய்தாலும்  கைமாறு செய்ய முடியாது' என்று முடித்துக் கொண்டார்.

ஹைலைட்ஸ்

  • நான் ஊடகங்களை தொடர்ந்து சந்தித்துப் பேசினேன், மன்மோகன்
  • டெல்லியில் நடந்த புத்தக விழாவில் மன்மோகன் கலந்துகொண்டார்.
  • ஆர்பிஐ குறித்து பேச மன்மோகன் மறுத்துவிட்டார்.
More News