This Article is From Feb 25, 2020

டிரம்புடனான விருந்தை புறக்கணிக்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் மன்மோகன் சிங் அதிருப்தியில் உள்ளார்.

டிரம்புடனான விருந்தை புறக்கணிக்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!!

டிரம்புக்கும், இந்திய எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை.

New Delhi:

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு நாளை மத்திய அரசு சார்பாகக் குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து அளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க முன்னாள் பிரதமர் என்ற அடிப்படையில் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் மன்மோகன் சிங் அதிருப்தியில் உள்ளார்.

இதன் காரணமாக அவர் விருந்து நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்புக்கும், இந்திய எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை.

இதேபோன்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாதும் டிரம்புடனான விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். 

2 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பு நாளை இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள விருந்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்புகிறார். 
 

இதேபோன்று டெல்லி அரசுப் பள்ளியில் டிரம்பின் மனைவி மெலனியா பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் ஆம் ஆத்மி கட்சியும் மத்திய அரசு மீது அதிருப்தியில் உள்ளது. இந்த விவாகரத்தை அரசியலாகக் கருதக்கூடாது என்று அமெரிக்கத் தூதரகம் விளக்கம் அளித்திருக்கிறது. 

இதுகுறித்து அதன் செய்தி தொடர்பாளர் அளித்துள்ள பேட்டியில்,'டெல்லி முதல்வர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. இது அரசியல் நிகழ்வு அல்ல. பள்ளியில் மாணவர்களுக்குச் சிறந்த கல்வி அளிக்கப்படுகிறது என்பதைத் தெரிவிக்கும் நிகழ்ச்சி' என்று தெரிவித்துள்ளார். 

.