This Article is From Apr 13, 2019

நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே. ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்!!

ராமநாதபுரத்தில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து ஜே.கே. ரித்தீஷ் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே. ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்!!

மாரடைப்பால் காலமான ஜே.கே. ரித்தீஷுக்கு வயது 46.

நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே. ரித்தீஷ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.
 

ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று மதியம் உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009 மக்களவை தேர்தலில் திமுக சார்பாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு ரித்தீஷ் வெற்றி பெற்றார். 

2014-ல் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். சமீப காலமாக அதிமுக கூட்டணியை ஆதரித்து ரித்தீஷ் தீவிர பிரசாரம் செய்து வந்தார். ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனை ஆதரித்து ரித்தீஷ் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 

இந்த நிலையில் இன்று மதியம் அவரது வீட்டில் ரித்தீஷின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர். 

சின்னப்புள்ள என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆன ரித்தீஷ் சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி. படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 

இலங்கையின் கண்டி நகரில் கடந்த 1973-ல் ரித்தீஷ் பிறந்தார். அவரது குடும்பம் 1976-ல் ராமேஸ்வரத்திற்கு குடி பெயர்ந்தது. மறைந்த ரித்தீஷுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஆரிக் ரோஷன் என்ற மகனும் உள்ளனர். 


 

.