ஆந்திரா முன்னாள் சபாநாயகர் கோடல்ல சிவ பிரசாத் ராவ் தற்கொலை

உள்துறை அமைச்சராகவும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஆந்திரா முன்னாள் சபாநாயகர் கோடல்ல சிவ பிரசாத் ராவ் தற்கொலை

72 வயதான ராவ் பசவதாரகம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு அவரது மரணத்தை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.


Hyderabad: 

ஹைலைட்ஸ்

  1. தெ.தே.கயின் மூத்த தலைவர்களில் ஒருவர். வயது 74
  2. 2014இல் ஆந்திரா பிரிக்கப்பட்ட போது சபாநாயகராக இருந்தார்.
  3. 6 முறை எம்.எல்.ஏவாக இருந்தார்.

தெலுங்கு தேசம்  கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஆந்திரா முன்னாள் சபாநாயகர் கோடல்ல சிவ  பிரசாத் ராவ் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். 72 வயதான ராவ் 

 பசவதாரகம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு அவரது மரணத்தை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

2014 ஆம் ஆண்டில் ஆந்திரா இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்னர் ராவ் சபாநாயகராக இருந்தார். 6 முறை எம்.எல்.ஏ -ஐந்து முறை நர்சரப் பேட்டையிலிருந்தும் 2014இல் சத்தனப்பள்ளியிலிருந்தும் வென்றார். 

உள்துறை அமைச்சராகவும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 1983 ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

ஒரு விவசாயி குடும்பத்தில் பிறந்த ராவ் குண்டூர் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று மருத்துவரானார்.

பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் கே. கிருஷ்ணா சாகர் ராவ்  விடுத்த அறிக்கையில் “முன்னாள் அமைச்சர் ஶ்ரீ கோடல்ல சிவா பிரசாத் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சியடைகிறேன். இந்த மூத்த அரசியல்வாதியின் துரதிஷ்டவசமான மறைவுக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று தெரிவித்திருந்தார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................