இந்த 5 ஆண்டுகளுக்கு எனது ஆதரவு அதிமுகவிற்குதான்! - கருணாஸ் உறுதி

இந்த 5 ஆண்டுகளுக்கு எனது ஆதரவு அதிமுகவுக்குத்தான் என சட்டசபையில் திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இந்த 5 ஆண்டுகளுக்கு எனது ஆதரவு அதிமுகவிற்குதான்! - கருணாஸ் உறுதி

தமிழக சட்டசபையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின் போது திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கூறியதாவது,

ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் பெயரில் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்ததற்கு நன்றி என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் மணிகண்டன், கல்லூரி அமையவுள்ளது கருணாஸ் தொகுதியில் இல்லை. எனது தொகுதியில் தான் என்றார். இதைத்தொடர்ந்து பேசிய கருணாஸ், எனது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டதற்கு நன்றி எனக் கூறினார்.

மேலும், இந்த 5 ஆண்டுகளுக்கும் தனது ஆதரவு அதிமுகவிற்கு தான் எனத் தெரிவித்தார். 5 ஆண்டுகளையும் அதிமுக அரசு நிறைவு செய்ய வேண்டும் என்பதே தனது ஆசை எனக் குறிப்பிட்ட எம்எல்ஏ கருணாஸ், இனி தேர்தலில் போட்டியிடுவேனா? இல்லையா என்பது குறித்து தற்போது தெரியவில்லை.

நான் புலி என்றாலும் பாசப்புலி என கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்த பாசப்புலியை கூண்டுக்குள் அடைத்து வைத்தால் பாசமாக இருக்குமா என கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................