தடைகளை தாண்டி தனது கனவுகளை கைப்பிடித்த ரெஹானா!

#Women's Day 2019: தனது கனவுகளுக்காக தவமிருந்து சாதித்த பெண்கள்!

 Share
EMAIL
PRINT
COMMENTS
தடைகளை தாண்டி தனது கனவுகளை கைப்பிடித்த ரெஹானா!

ஒரு பெண் தனது கனவுகளுக்காக வீட்டை தாண்டி செல்ல முடியாத நிலை இன்று சற்று மாறி, தனக்கு வேண்டுமென்றால் சந்திரனையும் தாண்டி சென்று அங்கு என்னதான் இருக்கிறது என பார்க்கும் அளவிற்கு பெண்கள் துணிந்து விட்டனர். இப்படி சாதனைகள் ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் இன்னும் பெண்களுக்கான அடிப்படை தேவைகள் மற்றும் உரிமைகள் மறுக்கப்படுவது நிதர்சன உண்மை. 

சாதாரண அலுவலகத்திலேயே பெண்களை விட, ஆண் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பார்கள். ஆனால் இது பெண்களுக்கானது இல்லை என பலமுறை மறுக்கப்பட்டும் அதில் சாதித்தே ஆக வேண்டும் என தீர்மானமாகி தனது கனவுகளை நோக்கி ஓடிகொண்டிருக்கும் ‘பைக் ரேசர்' ரெஹானாவிடம் நாம் மேற்கொண்ட சின்ன உரையாடல்.

 

bv283b7o

1. ஆண் பிள்ளைகளுக்கு இயற்கையாகவே வாகனங்கள் மீது மோகம் வந்து விடுகிறது, அப்படிபட்ட நிலையில் ஒரு பெண்ணாக இருந்து இந்த பைக் ரேஸ்களில் ஆர்வம் வந்தது எப்படி? 

நானும் ஓரு சராசரி பெண்ணாகத்தான் வளர்க்கப்பட்டேன், இஸ்லாமிய மதத்தை மிகுந்த நெறியுடன் பின்பற்றும் குடும்பமாக இருந்த நிலையில் எனக்கு நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு பயிலும் வரையில் வண்டி ஓட்ட தெரியாது என சொன்னா நம்புவீங்களா, ஆனா அதுதான் உண்மை. இதற்கு நேர் எதிராக என்னோட அண்ணா அப்போது பைக் ரேஸ்களில் கலந்து கொண்டு வெற்றிகள் பலவற்றை தன்பக்கம் ஈர்த்துகொண்டிருந்தார். அப்படி விளையாட்டாக ஒருநாள் எனக்கும் வண்டி ஓட்ட சொல்லி கொடு என கேட்க மிகுந்த ஆவலுடன் கற்றுக்கொண்டேன். அப்படித்தான் எனக்குள் இருக்கும் பைக் ரேசருக்கான அத்தியாயம் பிறந்தது.

2. முதல் வெற்றியை பற்றிய அணுபவம்? 

அடிப்படையான பயிற்சிக்கு பிறகு நான் முழுவதுமாக ரேஸ்களின் மீது கவனம் காட்ட துவங்கினேன், 2016-ல் நடந்த ஒரு போட்டியில் வெற்றி பெற்றது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அதுவரை வேகமாக மட்டுமே சென்ற எனக்கு இம்முறை டிராக்கில் கவனத்துடனும் இருக்க வேண்டும் என தோன்றியது. இதனால் 1 நாள் தீவிர பயிற்சிக்கு பின்னர் களமிறங்கி வெற்றி கண்டேன். அந்த வெற்றி எனக்குள் நம்பிக்கையை கொடுத்தது, அதன் பிறகு எவ்வளவு வெற்றிகள் வந்தாலும் அது எனக்கு ‘ஸ்பெஷல்' வெற்றி தான் என்றார் பெருமையாக

 

t4q8ml7o

3. இப்படி ரேஸிங்தான் எனது களம் என தீர்மானித்தபோது பெற்றோரின் ரியாக்‌ஷன்?

என்னுடைய முதல் ரேஸின் போது என் வீட்டில் நான் யாரிடமும் சொல்லவில்லை. அந்த போட்டியை வென்ற பிறகே நான் வீட்டில் கூறினேன். வழக்கமான மிடில் கிளாஸ் குடும்பத்து கவலைகளான உன் படிப்பு என்னாவது, உனக்கு கல்யாணம் செய்ய வேண்டாமா போன்ற பல கேள்விகளை வைத்தனர். பின்னர் எனது வெற்றிகளை கண்ட என் அம்மா நீ போய் கலந்துக்க நான் அப்பாகிட்ட பேசிக்கிறேன் என்றார். நீ என்னைப்போல் இல்லாமல் உனது கனவுகளுக்காக ஓடு என என்னை உற்சாகப்படுத்தியதும் அவரே.

4. பெண்களுக்கான ரேசிங் கடினமான நிலையில் இதற்கான பயிற்சிகள் என்ன தேவைப்பட்டது? 

பள்ளியிலேயே நான் தடகள வீராங்கனையாகத்தான் இருந்தேன். அதனால் இயற்கையாகவே எனக்கு ஸ்டாமினா இருந்தது. ஆனால் எனது பைக்கும் எனக்கும் பேலன்ஸ் செய்துகொள்ள எனக்கு கவனமும் சக்தியும் தேவைப்பட்டன. இதற்கு உடற்பயிற்சி அடிப்படை ஒழுக்கத்தை தரும். அப்படி சரியான சாப்பாடு தீவிர உடற்பயிற்சி மற்றும் டிராக்கில் பயிற்சி என அனைத்தும் சேர்ந்து தான் எனது ஒவ்வொரு வெற்றிக்கும் ஊன்றுகோலாக இருக்கிறது. ஸ்விமிங் மற்றும் சைக்கிளிங் எனக்கு தேவையான கவனத்தனையும் மற்றும் ஸ்டாமினாவையும் தருகிறது.

 

rv9bhcug

5. ஒரு வெற்றிக்கு பின்னால் இருப்பது ரேஸரா அல்லது வண்டியா?

இதற்கு நான் 50-50 என்று தான் சொல்ல முடியும். குதிரை பந்தையத்தை போல தான் ஜாக்கி சொல்வதை குதிரை கேட்காவிட்டாலும் அல்லது குதிரையை சரியாக செலுத்த தெரியவில்லை என்றாலோ தோல்வி நமக்கே.

6. மிகவும் பிடித்த வண்டி எது?

என்னதான் எனக்கு ரேஸ் பைக்குகள் பிடித்தாலும் எனக்கும் மிகவும் இஷ்டமானது ஆர்15 வர்ஷன் 3 மட்டும் தான்.

7. ரேஸ்களில் மறக்க முடியாத ஒரு நினைவு?

மிடில் கிளாஸ் பெண்ணாக இருந்ததால் எனக்கு முதலில் அடிப்படை தேவைகள் வாங்குவதில் சிறமம் இருந்தது. ஒரு ரேசில் ஜெயித்தால் நான் அந்த பணத்தை முழுவதுமாக அடுத்த ரேசில் போடுவேன். அப்படி ஒரு முறை ரேசுக்கு சில மணி நேரத்திற்கு முன் எனது நண்பரிடம் இருந்து ஹெல்மெட் போன்றவற்றை வாங்கி ஓட்டி ஜெயித்தது மறக்க முடியாத ஒன்று.

 

mo43ia1

8. தற்போதைய திட்டங்கள்? 

தற்போது யமஹா நிறுவனத்திற்காக ஓட்டிக்கொண்டிருக்கிறேன், ஸ்பார்க்ஸ் ரேசிங் என்னும் குழு மூலமாக வேறு நாடுகளுக்கு சென்று ஓட்டுவதே என் கனவு. அடுத்த மாதம் மெக்ஸிகோவில் உலக சாம்பியன்ஷிப் நடக்கவிருக்கிறது, கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்பான்சர்கள் கிடைத்தால் சாதிப்பேன்.

9. இந்திய பெண் ரேசர்களின் நிலை?

சில வருடங்களாகத்தான் இந்த ரேசிங் பற்றிய செய்திகளை நாம் கவனிக்கிறோம், நான் 2016-ல் பங்கேற்றபோது பெண்களுக்கான உடைமாற்றும் அறை கூட கிடையாது. ஆண்களுக்கான ஸ்போர்டாக இருந்ததை மாற்றி நாங்களும் சாதித்து வருகிறோம். இந்த நிலையை மாற்ற இந்திய ஸ்போர்ட்ஸ் கழகம் சார்பில் எங்களுக்கு முதலில் அங்கிகாரம் கிடைக்க வேண்டும். இப்போது கிரிக்கெட், தடகளம், பேட்மிண்டன் போன்றவற்றில் மாநில அளவில் சாதித்தால் கூட வேலை வாய்பு கிடைக்கிறது. ஆனால் எங்களுக்கு அந்த நிலை கிடையாது. எங்களுக்கான தேவைகள் மற்றும் அறிமுகங்கள் கிடைத்தாலே எனக்கு பின்னர் வரும் ரேசர்களுக்கு பயிற்சி பெற்று சாதிக்க ஒரு விருப்பம் வரும்.

10. உலக மகளிர் தினம் குறித்து சில வார்த்தைகள்!

‘நாம் முதல் அடி எடுத்து வைத்தால் தான் நாம்மால் அதை செய்ய முடியுமா என்று நமக்கு தெரியும், பலரும் உண்ணால் முடியாது, உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்றொல்லாம் கேள்வி வரும், இதற்காக உன் தேடலை நிறுத்தாதே. பயத்தை தவிர்த்து கனவை நோக்கி ஓடு இந்த உலகமே உனக்கு தான் என்றார் புன்னகையோடு.

 

lrr3vn4


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................