This Article is From Apr 08, 2019

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக: ஹைலைட்ஸ்!

சென்ற முறை மக்களவைத் தேர்தல் ஆரம்பிக்கும் ஒரு நாளைக்கு முன்னர் தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக: ஹைலைட்ஸ்!

130 கோடி இந்தியர்களை மனதில் வைத்து இந்த ‘சங்கல்ப் பத்ரா’ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

New Delhi:

லோக்சபா தேர்தல் ஆரம்பிக்க இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. இன்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக, ‘சங்கல்ப் பத்ரா' என்ற தேர்தல் அறிக்கை வெளியிடட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் அமித்ஷா, மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

சென்ற முறை மக்களவைத் தேர்தல் ஆரம்பிக்கும் ஒரு நாளைக்கு முன்னர் தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டது. இந்த முறை, தேர்தல் ஆணையம், தேர்தல் ஆரம்பிக்கும் 48 மணி நேரத்துக்கு முன்னர் எந்த வித பிரசாரமும் இருக்கக் கூடாது என்று தெரிவித்ததை அடுத்து, இன்று அறிக்கையை வெளியிட்டுள்ளது பாஜக. 

ஹைலைட்ஸ்:

-130 கோடி இந்தியர்களை மனதில் வைத்து இந்த ‘சங்கல்ப் பத்ரா' வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

-பல்வேறு துறையில் இருக்கும் நபர்களிடமிருந்து கருத்து கேட்ட பின்னர் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக பாஜக கூறியுள்ளது. 

-தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது அமித்ஷா பேசுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் மிகவும் ஸ்திரமான ஓர் அரசாங்கத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். நமது நாடு இன்று உலகின் முக்கிய இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இன்று மின்சாரம் உள்ளது. 8 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 7 கோடி குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, 50 கோடி மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது' என்றார். 

வாக்குறுதிகள்:

-தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விரைவாக ராமர் கோயில் கட்ட முயற்சி.

-அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மூலம் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.

-சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.

-வட்டி இல்லாமல் 1 லட்சம் ரூபாய் வரை குறுகிய கால விவசாயக் கடன் அளிக்கப்படும்.

-வட கிழக்கு மாநிலங்களில் சட்டத்துக்குப் புறம்பாக குடியேறுபவர்களை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்

-இந்தியாவின் 75 ஆண்டு கால சுதந்திரத்தைப் போற்றும் வகையில் 75 வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன

-நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் உருவாக்கப்படும்.

-‘நல் சே ஜல்' திட்டத்திற்குக் கீழ் 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் தண்ணீர் இணைப்பு வழங்கப்படும்

-சமஸ்கிரதத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் பள்ளிகள் அளவில் கற்பித்தல் அதிகரிக்கப்படும்.

-அனைத்து மாநிலங்களுடனும் ஆலோசிக்கப்பட்டு, ஜி.எஸ்.டி வரி நடைமுறை அளிதாக்கப்படும்.

-

.