கொரோனாவை சமாளிக்க திணறும் அமெரிக்கா! தொற்று பாதிப்பில் புளோரிடா உலக அளவில் நான்காவது இடம்!!

அமெரிக்காவின் ஆர்லாண்டோவில் வால்ட் டிஸ்னி வேர்ல்ட் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளின் அனுமதிப்புடன் திறக்கப்பட்டதை தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனாவை சமாளிக்க திணறும் அமெரிக்கா! தொற்று பாதிப்பில் புளோரிடா உலக அளவில் நான்காவது இடம்!!

புளோரிடாவில் வால்ட் டிஸ்னி வேர்ல்டில் டிஸ்னி ஸ்பிரிங்ஸ் ஷாப்பிங் மற்றும் டைனிங் காம்ப்ளெக்ஸில் விருந்தினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • Florida reported a record increase of more than 15,000 new cases
  • It has broken New York state's record of 12,847 new cases on April 10
  • Florida reported record testing; 143,000 results announced on Sunday

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.29 கோடியை கடந்துள்ளது. இந்நிலையில் உலக வல்லரசான அமெரிக்கா கொரோனா தொற்றை தடுப்பதில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் மட்டும் 33 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.35 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 

தற்போது அதிக அளவு தொற்று பாதித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் இந்தியாவிற்கு அடுத்து நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,000 க்கும் அதிகமானோர் இம்மாகாணத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது கடந்த ஏப்ரல் 10-ம் தேதியே நியூயார்க் நகரத்தின் எண்ணிக்கையை கடந்திருந்தது.

அமெரிக்காவின் ஆர்லாண்டோவில் வால்ட் டிஸ்னி வேர்ல்ட் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளின் அனுமதிப்புடன் திறக்கப்பட்டதை தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றின் அறிக்கையின்படி, அமெரிக்காவின் சுமார் 40 மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தேசிய அளவில், கடந்த நான்கு நாட்களாக ஒரு நாளைக்கு சுமார் 60,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அரிசோனா, கலிபோர்னியா, புளோரிடா மற்றும் டெக்சாஸிலும் மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் நேர்மறையான சோதனை விகிதங்கள் அதிகரித்து வருகின்றதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தற்போது புளோரிடாவில் மட்டும் 1,43,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)