கர்நாடகாவில் ஆராய்ச்சிக் கப்பலில் தீ விபத்து! - 16 விஞ்ஞானிகள் பத்திரமாக மீட்பு

வெள்ளியன்று இரவு திடீரென வந்த எச்சரிக்கையை தொடர்ந்து, தீயை அணைக்க கடலோர காவல்படை இரண்டு கப்பல்களை அனுப்பியது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கர்நாடகாவில் ஆராய்ச்சிக் கப்பலில் தீ விபத்து! - 16 விஞ்ஞானிகள் பத்திரமாக மீட்பு

கப்பலில் இருந்த 36 பேரையும், 16 விஞ்ஞானிகளையும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.


New Delhi: 

மங்களூரு கடற்பகுதியில் தீப்பிடித்த ஆராய்ச்சிக் கப்பலில் இருந்த 30 பேரை கடலோர காவல்படை பத்திரமாக மீட்டுள்ளனர். வெள்ளியன்று இரவு திடீரென வந்த எச்சரிக்கையை தொடர்ந்து, தீயை அணைக்க கடலோர காவல்படை இரண்டு கப்பல்களை அனுப்பியது.

சுஜெய் மற்றம் விக்ரம் ஆகிய இரு கப்பல்களும் தீயணைப்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தை அடைந்ததும் வீரர்கள் விரைந்து பணிகளை மேற்கொண்டு, தீயை அணைத்து உள்ளிருந்தவர்களையும் பத்திரமாக மீட்டனர்.

கர்நாடக மாநிலம் மங்களூர் கடற்பகுதியில் நேற்று இரவு சாகர் சம்படா என்ற ஆராய்ச்சிக் கப்பல் சென்றுகொண்டிருந்தது. அதில் கப்பல் ஊழியர்கள் 36 பேர், 16 விஞ்ஞானிகள் பயணம் செய்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தவுடன், அவர்கள் விரைந்து மீட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்திய இந்திய கடலோர காவல்படை தனது டிவிட்டர் பதிவில், தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்ததும் விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொண்டோம். அதில் இருந்தவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தற்போது, ஆராய்ச்சிக் கப்பலான சாகர் சம்படா மங்களூரு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .

கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................