திருவள்ளூரில் பயங்கர தீ விபத்து! 21 குடிசைகள் வீடுகள் எரிந்து நாசம்!!

2 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தன. அவற்றில் ஒன்றில் தண்ணீர் இல்லாமல் இருந்தது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
திருவள்ளூரில் பயங்கர தீ விபத்து! 21 குடிசைகள் வீடுகள் எரிந்து நாசம்!!

குப்பையில் வைக்கப்பட்ட தீ குடிசைக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 21 வீடுகள் எரிந்து நாசம் ஆகியுள்ளன. கிளச்சேரி அருகே பாத்திமா புரம் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

குப்பை குவியலுக்கு வைக்கப்பட்ட தீ, காற்றில் பரவில் குடிசைகளை எரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதியம் 12-1 மணிக்குள்ளாக தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. 

தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து 2 தீயணைப்பு லாரிகள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. தட்டுப்பாடு காரணமாக தீயணைப்பு லாரிகளில் ஒன்றில் தண்ணீர் இல்லை. 
 

உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றபோதும், 21 குடிசைகள் தீயில் கருகி நாசம் ஆகியுள்ளன. இதற்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................