ஒடிசாவில் தீப்பிடித்து எரிந்த எக்ஸ்ப்ரஸ் ரயில்! அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!!

புதுடெல்லியில் இருந்து புவனேஸ்வரம் வரை செல்லும் ராஜதானி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் தீப்பிடித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஒடிசாவில் தீப்பிடித்து எரிந்த எக்ஸ்ப்ரஸ் ரயில்! அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!!

தீயணைப்பு படையினரின் துரிதமான நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


New Delhi: 

ராஜதானி எக்ஸ்ப்ரஸ் ரயில் ஒடிசாவில் தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை. 

டெல்லியில் இருந்து - ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்திற்கு ராஜதானி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஒடிசாவின் பாலசோர் மற்றும் சோரோ ரயில் நிலையத்திற்கு இடையே ராஜதானி எக்ஸ்ப்ரஸ் ரயில் வந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. 

மின்சாரம் சப்ளை செய்யும் ஒரேயொரு பெட்டியில் மட்டுமே ஏற்பட்ட தீ அதிர்ஷ்டவசமாக மற்ற பெட்டிகளுக்கு பரவவில்லை. இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு படையினரும் தீ மற்ற இடங்களுக்கு பரவாத வகையில் துரிதமாக செயல்பட்டனர். 

தீ விபத்து ஏற்பட்டபோது மின் சப்ளை செய்யும் பெட்டி, ரயிலில் இருந்து துண்டிக்கப்பட்டது. இதுவும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதற்கான முக்கிய காரணம். 

மதியம் 12.50-க்கு தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அது சரி செய்யப்பட்டு மதியம் 2.59-க்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................