This Article is From Feb 25, 2019

சென்னையில் கால்டாக்சி நிறுவனத்தில் தீ விபத்து! - 200 கார்கள் எரிந்து நாசம்!

சென்னை போரூர் அருகே தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 200-க்கும் அதிகமான கார்கள் எரிந்து நாசம் ஆகின.

சென்னையில் கால்டாக்சி நிறுவனத்தில் தீ விபத்து! - 200 கார்கள் எரிந்து நாசம்!

5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

சென்னை போரூர் அருகே தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 200-க்கும் அதிகமான கார்கள் எரிந்து நாசம் அடைந்துள்ளன. 

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. டிரங்க் சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கால் டாக் நிறுவனம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், பிற்பகலில் திடீரென அங்கு தீவிபத்து ஏற்பட்டு, கார்கள் அடுத்தடுத்து பற்றி எரியத் தொடங்கின. இதனால் கரும்புகை ஏற்பட்டதுடன், கார் டயர்கள், சிலிண்டர்கள் உள்ளிட்டவை வெடிக்கத் தொடங்கின. 

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்காக சுற்றுப் பகுதியில் இருந்த பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்தினர். கார்கள் எரிந்ததால் வெளியான கரும்புகையால் அருகிலிருந்த மருத்துவமனை நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. 

இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்ற விவரம் தெரியவரவில்லை. நேற்று பெங்களூரு விமான கண்காட்சி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 300-க்கும் அதிகமான கார்கள் தீயில் எரிந்து நாசம் ஆகின. 

 

மேலும் படிக்க: சென்னையில் கால்டாக்சி நிறுவனத்தில் தீ விபத்து! - 200 கார்கள் எரிந்து நாசம்!

.