பயனாளர்களின் தகவல் திருட்டு விவகாரத்தில் ஃபேஸ்புக்கிற்கு ரூ. 3.42 லட்சம் கோடி அபராதம்!!

அமெரிக்காவின் வர்த்தக ஒழுங்கு முறை கூட்டமைப்பான Federal Trade Commission பேஸ்புக்கிற்கு அபராதத்தை விதித்துள்ளது. இதுபற்றி ஃபேஸ்புக் தரப்பில் விளக்கம் ஏதும் தரப்படவில்லை.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பயனாளர்களின் தகவல் திருட்டு விவகாரத்தில் ஃபேஸ்புக்கிற்கு ரூ. 3.42 லட்சம் கோடி அபராதம்!!

பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக ஃபேஸ்புக் மன்னிப்பு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Washington, United States: 

பயனாளர்களின் (Users) தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தில் பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கிற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 3.42 லட்சம் கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

உலகில் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக் முன்னணியில் உள்ளது. டேட்டா உபயோகிப்போரில் 90 சதவீதம் பேர் ஃபேஸ்புக் அக்கவுன்ட் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப் பெரிய தளம் என்பதால் பேஸ்புக் வர்த்த ரீதியாகவும் பயன்படுத்தப்படுகிறது. 

இதில் பயனாளிகள் தங்களது மொபைல் எண், மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல்களை அளித்துள்ளனர். பயன்பாட்டிற்கு ஏற்ப ஒரு பயனாளிக்கு பிடித்தது, பிடிக்காதது உள்ளிட்டவை டேட்டாவாக சேமிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் நமக்கு விருப்பானவற்றை வாங்கவோ, பக்கத்தை லைக் செய்யவோ நமக்கு அறிவுறுத்தல்கள் (notification) வருவதை பார்க்க முடியும். 

இந்த நிலையில் அரசியல் விவகாரங்களை கவனிக்கும் கேம்ப்ரிட்ஜ் அனலெட்டிக்கா என்ற நிறுவனத்திற்கு தனது பயனாளிகளின் தகவல்களை ஃபேஸ்புக் அளித்ததாக புகார்கள் எழுந்தன. இந்த நிறுவனம் கடந்த 2016-ல் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிபர் வேட்பாளராக இருந்தபோது அவர் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக வேலை செய்தது. பயனாளிகளின் தகவல்கள் கிடைத்தால் அவர்களது எண்ண ஓட்டங்களை அறிந்து, அதற்கேற்ப பிரசாரங்களை கேம்ப்ரிட்ஜ் நிறுவனத்தால் செய்ய முடியும். 

தகவல் திருடப்பட்ட விவகாரம் புயலைக் கிளப்பிய நிலையில், இதற்கு பேஸ்புக் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது. இதற்கிடையே இந்த பிரச்னை குறித்து அமெரிக்காவில் வர்த்தகங்களை ஒழுங்குபடுத்தும் FTC எனப்படும் Federel Trade Commission விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், ஃபேஸ்புக்கிற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 3.42 லட்சம் கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த விவகாரம் குறித்து பேஸ்புக் தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. இந்த தகவலை பிரபல செய்தி நிறுவனமான AFP வெளியிட்டுள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................