This Article is From Aug 24, 2018

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு - ஆகஸ்ட் 31-ம் தேதி இறுதி விசாரணை

அரசு தரப்பு வாதங்களுக்கு கூடுதல் அவகாசம் தேவை என்று சுந்தரம் கேட்டுக் கொண்டதால், இறுதி விசாரணையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு - ஆகஸ்ட் 31-ம் தேதி இறுதி விசாரணை
Chennai:

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தாங்கள் முதல்வரை மாற்றக் கூறியே வலியுறுத்தியதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பை கேட்கவில்லை என்றும் எம்.எல்.ஏ தரப்பில் வாதிடப்பட்டது. 

தி.மு.க தான் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது, நாங்கள் இல்லை என எம்.எல்.ஏக்கள் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி செய்யப்படாமல் இருந்திருந்தால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வக்களித்து ஆட்சியை கலைத்திருப்பார்கள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. அதற்கு பதிலளித்த ராமன், எம்.எல்.ஏக்கள் எதிர்த்து வாக்களித்திருந்தாலும் ஆட்சி கலைக்கப்பட்டிருக்காது. ஏனெனில் 4 எம்.எல்.ஏக்கள் கூடுதலாக அவர்களிடம் இருக்கிறார்கள் என்றார்.

அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டதாவது, இது போன்ற சூழலில் ஆளுநர் என்ன செய்ய முடியும் என்பதில்லை விஷயம். எம்.எல்.ஏக்கள் ஆளுநரை என்ன செய்ய வலியுறுத்தினர் என்பதே கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். 

அரசு தரப்பு வாதங்களுக்கு கூடுதல் அவகாசம் தேவை என்று சுந்தரம் கேட்டுக் கொண்டதால், இறுதி விசாரணையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

.