பெண்சிசுவைக் கலைக்க முயன்ற கர்ப்பிணி மரணம் - நர்ஸ் தலைமறைவு

நர்ஸ் ஒருவரது வீட்டிற்கு சென்று கருக்கலைப்புக்கு முயன்றுள்ளார் ராமுத்தாயி. அங்கு சிகிச்சை தோல்வியடைந்து, ராமுத்தாயின் உயிர் பிரிந்தது

 Share
EMAIL
PRINT
COMMENTS
பெண்சிசுவைக் கலைக்க முயன்ற கர்ப்பிணி மரணம் - நர்ஸ் தலைமறைவு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராமுத்தாயி (30). இவருக்கு திருமணம் முடிந்து 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பிணியான இவரை குடும்பத்தினர் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சோதனை செய்ததில், கருவில் வளர்வது பெண் சிசு என்பது தெரியவந்தது. இதையடுத்து, கருவை கலைக்கும்படி குடும்பத்தினர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

இதுதொடர்பாக தொட்டப்பனய நகரில் உள்ள ஒரு மருத்துவமனையை ராமுத்தாயி அணுகியுள்ளார். அவர்கள் கருவை கலைக்க மறுப்பு தெரிவித்ததோடு, 7 மாதம் நிறைவடைந்து விட்டதாகவும், கருக்கலைப்புக்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, நர்ஸ் ஒருவரது வீட்டிற்கு சென்று கருக்கலைப்புக்கு முயன்றுள்ளார் ராமுத்தாயி. அங்கு சிகிச்சை தோல்வியடைந்து, ராமுத்தாயின் உயிர் பிரிந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நர்ஸ் தலைமறைவாகியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 80,90 -களில் பெண் சிசுக்களை கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லும் வழக்கம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் நிலவி வந்தது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................