எஸ்கலேட்டர் உடையும் முன் உயிர் தப்பிய தந்தை - மகன்: வைரல் வீடியோ

எஸ்கலேட்டரின் செயல் பாதையில் சாவி சிக்கிக் கொண்டதால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

எஸ்கலேட்டர் உடையும் முன் உயிர் தப்பிய தந்தை - மகன்: வைரல் வீடியோ

The escalator completely collapsed moments after the man and little boy stepped off it

உலகின் பல்வேறு இடங்களில் சாதரண படிகட்டுகளுக்கு மாறாக எஸ்கலேட்டர் எனப்படும் எலக்ட்ரானிக் படிகட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான ஷாப்பிங் மால்களில் எஸ்கலேட்டர் இருப்பதை நாம் பார்த்திருப்போம்.

சீனா நாடு, சுவான்செங் பகுதியில் இருந்த ஒரு மாலில், திடீரென்று எஸ்கலேட்டர் செயலிழந்து உடையும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

 
 

விபத்து நடைப்பெறுவதற்கு சில நொடிகளுக்கு முன்னரே, ஒரு சிறுவனும், அவனது தந்தையும் எஸ்கலேட்டரில் பயணம் செய்துள்ளனர். எஸ்கலேட்டரில் இருந்து அவர்கள் வெளிவந்த மறுகணம், படிகட்டுகள் விபத்துகுள்ளாகி உள்ளன.

விபத்துக்கான காரணத்தை கண்டறிய மால் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், எஸ்கலேட்டரின் செயல் பாதையில் சாவி சிக்கிக் கொண்டதால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsbeep

விபத்து ஏற்படும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. இது குறித்து விவாதித்த நெட்டிசன்கள், தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும், சில சமயங்களில் அவை ஆபத்து விளைவிப்பதாக உள்ளது என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

Click for more trending news