பா.ஜ.கவுக்கு எதிராக கோஷம் - சக பயணியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தமிழிசை

பா.ஜ.காவுக்கு எதிராக கோஷமிட்ட பெண் ஒருவருடன், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
பா.ஜ.கவுக்கு எதிராக கோஷம் - சக பயணியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தமிழிசை

பா.ஜ.காவுக்கு எதிராக கோஷமிட்ட பெண் ஒருவருடன், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். தூத்துக்குடி விமான நிலையத்தில், தமிழிசையுடன் விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் “ ஃபாசிஸ பா.ஜ.க அரசு ஒழிக” என கோஷமிட்டுள்ளார். இதனால், கோபமடைந்த தமிழிசை, அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த காவலர்கள் அவரை தடுத்து சமாதானம் செய்தனர்.

கோஷமிட்ட அந்த பெண் கைது செய்யப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை “ நடுத்தர வயது பெண் ஒருவர் பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்டபடி, விமான நிலைய வாயில் வாரை என்னை பின் தொடர்ந்து வந்தார். அவரது தோற்றம் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அவருக்கு பின்னால் ஏதோ ஒரு அமைப்பு இருக்கிறது” என்றார்.

இந்த சம்பவத்தால், தூத்துக்குடி விமான நிலையத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................