விவசாயிகளின் நகைக் கடன் தள்ளுபடி! - மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகளில் 5 சவரன் வரை விவசாயிகள் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளர். மேலும், நகைக்கடன் தள்ளுபடி திமுக தேர்தல் அறிக்கையிலும் சேர்க்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
விவசாயிகளின் நகைக் கடன் தள்ளுபடி! - மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் திருப்பூரில் தொழில்கள் முடங்கி மக்கள் வேலையின்றி தவிக்கின்றனர். குட்டி சிங்கப்பூராக இருந்த திருப்பூரை மோடி அரசாங்கம் சீரழித்து விட்டது. மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் திருப்பூரில் சிறு, குறு தொழில்கள் அனைத்தும் முடங்கி விட்டன.

பணமதி்ப்பு ரத்து நடவடிக்கையால் திருப்பூரில் மட்டும் 15 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்தனர். ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மட்டுமே மோடி ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார். கடந்த 5 ஆண்டு கால மோடி ஆட்சியில் 4 கோடியே 70 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். மோடியும், எடப்பாடியும் ஆட்சி செய்வதால் மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் நிம்மதியில்லாமல் உள்ளனர்.

தமிழகத்தின் 18 காலி சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் 18 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். அப்படி 18 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால் அதிமுக ஆட்சி பெரும்பான்மையை இழக்க நேரிடும். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகளின் இடைத்தேர்தலை நிறுத்த சதி நடக்கிறது. அதிமுக இடைத்தேர்தல்களில் தோற்றால் எடப்பாடி அரசு நீடிக்க முடியாது என்பதால் தேர்தலை நடத்த சதி நடக்கிறது. பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் துணை போனால் அற்கு ஏற்ப பின்விளைவுகளை சந்திக்க நேரிடு்ம் என்றார்.

மேலும், கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகளில் 5 சவரன் வரை விவசாயிகள் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி திமுக அறிக்கையில் சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................