This Article is From Jun 09, 2018

'அந்தப் பிழையைக் கண்டடைந்துவிட்டோம்!'- மீண்டும் பிரச்னையில் சிக்கித் தப்பித்த ஃபேஸ்புக்

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக், டேட்டா கசிவு காரணமாக தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது

'அந்தப் பிழையைக் கண்டடைந்துவிட்டோம்!'- மீண்டும் பிரச்னையில் சிக்கித் தப்பித்த ஃபேஸ்புக்

புதிய பிரச்னையின் `பக்' கண்டுபிடிக்கப்பட்டது என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது

ஹைலைட்ஸ்

  • தொடர்ந்து டேட்டா கசவு விஷயத்தில் மாட்டி வருகிறது ஃபேஸ்புக்
  • தற்போதைய பிரச்னையில் 1.4 கோடி பேரின் செட்டிங்ஸில் மாற்றம் ஏற்பட்டுள்ளது
  • இந்த புதிய பிரச்னையின் அனைத்து விஷயங்களும் சரிசெய்யதுவிட்டதாம் ஃபேஸ்புக்
San Francisco:

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக், டேட்டா கசிவு காரணமாக தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் சுமார் 1.4 கோடி முகநூல் பயனர்களின் தனிப்பட்ட அமைப்புகள் ஒரு வைரஸால் மாற்றம் கண்டது. இதனால், அவர்கள் ஃபேஸ்புக்கில் பிரைவேட் என்று சொடக்கி வைத்திருந்த தகவல்கள் பப்ளிக் பார்க்கும்படி ஆனது. இதற்குக் காரணமாக இருந்த பக் அல்லது வைரஸை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளது ஃபேஸ்புக்.

இதற்கு முன்னர் இரு மிகப் பெரும் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி ஃபேஸ்புக்கிற்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியது. 

அதில் முதலாவது, பல லட்சம் முகநூல் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்களுக்குத் தெரியாமல் பல ஆண்டுகளாக போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுத்து வந்தது ஃபேஸ்புக். இதில் முக்கியமானது, சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹூவேய் நிறுவனத்துக்கு ஃபேஸ்புக், தனது தரவுகளைப் பார்க்க அனுமதித்தது தான். இது பெரும் பிரச்னையாவதற்குக் காரணம், ஹூவேய் நிறுவனத்தை அமெரிக்க ராணுவம் தடை செய்து வைத்திருக்கிறது. 

மற்றொன்று, கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரம். இந்த நிறுவனத்துக்கு ஃபேஸ்புக், 8.7 கோடி பயனர்களின் தரவுகளை கொடுத்துள்ளது தெரிய வந்தது. இந்த நிறுவனம் தான், டொனால்டு ட்ரம்ப் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்ட போது கன்சல்டன்சியாக செயல்பட்டது.

இப்படி பல்வேறு தொடர் பிரச்னைகளில் ஃபேஸ்புக் வறுபட்டு வரும் நிலையில், அந்நிறுவனம், `ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போடும் போது, ஆட்டோமேடிக்காக எல்லாரும் பார்க்கும் வகையில் அமைப்புகளில் மாற்றம் செய்த வைரஸை கண்டுபிடித்து விட்டோம். கடந்த மே மாதம் 18 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை இந்த வைரஸ் கிட்டத்தட்ட 1.4 கோடி பேரின் அமைப்புகளில் மாற்றம் செய்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பல பயனர்களுக்குத் தெரியவில்லை. எனவே, இப்படி ஒரு பிரச்னை இருந்தது என்று நாங்களே அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறோம்' என்றுள்ளது.

.