எல்லைத் தாண்டி இந்தியாவின் அதிரடி; சீனாவில் கொதித்த சுஷ்மா!

Sushma Swaraj in China: புல்வாமா தாக்குதலில் (Pulwama Terror Attack) 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியது

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 16வது ரஷ்ய-சீன-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக சீனாவுக்கு சென்றுள்ளார்.

Wuzhen, China:

Sushma Swaraj in China: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 16வது ரஷ்ய-சீன-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக சீனாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ அவர்களால் வரவேற்கப்பட்டார்.

அப்போது உரையாடிய சுஷ்மா, ‘இந்த சந்திப்பு நடந்து கொண்டிருக்கும் சில நாட்களுக்கு முன்னர்தான் இந்திய ராணுவத்தினர் மீது மிக மோசமான தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. மொத்த இந்தியாவும் அதனால் கோபத்தில் இருக்கிறது. 

இந்தியத் தரப்பு, பாகிஸ்தானுக்கு தீவிரவாதத்தை கட்டுப்படுத்துமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. ஆனால், அதற்கு செவி மடுக்காமல் இருந்ததால் இந்தியா நடவடிக்கை எடுத்தாக வேண்டியிருந்தது. 

முன்னர் எங்கள் ராணுவத்தின் மீது தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு, இன்னும் அது போன்ற பல தாக்குதல்களுக்குத் திட்டமிட்டு வருவதாக எங்களுத்துத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்துதான் தீவிரவாத முகாம்களை மட்டும் அழிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தோம். 

ஐ.நா அமைப்பு மற்றும் உலக நாடுகள் ஜெய்ஷ் அமைப்பின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்தது. ஆனால் பாகிஸ்தான் தரப்பு அதற்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை' என்றார்.

பல உலக நாடுகள், ஜெய்ஷ் அமைப்பின் செயலுக்குப் பிறகு கண்டனம் தெரிவித்திருந்தாலும், சீனா மவுனம் காத்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் சுஷ்மா, சீனாவில் பேசியுள்ள கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. 

புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் நேற்று தாக்குதல் நடத்தியது.

நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 12 மிராஜ் 2000 என்ற ஜெட் போர் விமானம் 1,000 கிலோ எடை கொண்டு வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியுள்ளது.

சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை போன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் 100 சதவிகிதம் வெற்றிகரமாக முடிந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

மேலும் படிக்க - "ஜம்மூ காஷ்மீரில் 2 ஜெய்ஷ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!"