“அரசு போடும் அதீத வரி சமூக அநீதி..!”- உச்ச நீதிமன்றத தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே

Chief Justice - 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-யால் வர்த்தகத் துறை இன்னும் பாதிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

“அரசு போடும் அதீத வரி சமூக அநீதி..!”- உச்ச நீதிமன்றத தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே

தொடர் பொருளாதார வீழ்ச்சி, எதிர்க்கட்சிகள், மத்திய அரசை விமர்சனம் செய்ய வழிவகை செய்துள்ளது.

New Delhi:

இன்னும் ஒரு சில நாட்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே, குடிமக்களுக்கு விதிக்கப்படும் அதீத வரிச் சுமையைக் குறைத்து அனைத்துத் தரப்பு வளர்ச்சிக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி எஸ்ஏ பாப்டே, “அதீத வரி விதிப்பு என்பது மக்கள் மீது தொடுக்கப்படும் அநீதி என்று பார்க்கலாம். வரி ஏய்ப்பு என்பது மற்ற குடிமகனுக்கு செய்யும் அநீதி. ஆனால் அதீத வரி விதிப்பு, அரசே மக்களுக்குச் செய்யும் அநீதி,” என்று பேசினார். 

நாட்டின் பொருளாதார வளர்ச்சித் தொடர்ந்து சரிவுப் பாதையில் சென்று கொண்டிருக்க, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ள நேரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டின் சில்லறைப் பண வீக்கமானது கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.35 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், சாமானிய மக்கள் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. 

இந்த தொடர் பொருளாதார வீழ்ச்சி, எதிர்க்கட்சிகள், மத்திய அரசை விமர்சனம் செய்ய வழிவகை செய்துள்ளது. காங்கிரஸின் ராகுல் காந்தி, “நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை மற்றும் தொடர் விலையேற்றம் ஒரு பொருளாதார அவசரநிலையைக் கொண்டுவந்துள்ளது,” என்று காட்டமாக விமர்சித்துள்ளார். 

அதேபோல 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-யால் வர்த்தகத் துறை இன்னும் பாதிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்நிலையில் நீதிபதி பாப்டே, “நாட்டின் வளங்கள் பரவலாவதில் வரித் துறை தீர்ப்பாயம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தீர்ப்பாயத்தில் விரைவாக கிடைக்கும் தீர்ப்பினால் வரி கட்டும் குடிமகன் பயனடைகிறான். அதேபோல வரியை வசூலிப்பவர்களுக்கும் தீர்ப்பாயம் முக்கியமானதாக இருக்கிறது,” என்றார். 

More News