விமான நிலையத்தில் உதவியாளரின் கன்னத்தில் அறை விட்ட முன்னாள் முதல்வர்! #Video

முன்னாள் முதல்வர் பளார் விடும் காட்சி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
விமான நிலையத்தில் உதவியாளரின் கன்னத்தில் அறை விட்ட முன்னாள் முதல்வர்! #Video

முன்கோபத்திற்காக பலமுறை சர்ச்சையில் சிக்கியவர் சித்தராமையா.


Mysuru: 

காங்கிரஸ் மூத்த  தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா விமான நிலையத்தில் வைத்து தனது உதவியாளரின் கன்னத்தில் பளார் என அறை விட்டுள்ளார். இந்த காட்சி கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. 

வீடியோ காட்சியில், சித்தாமையாவின் உதவியாளர் அவரது போனை காதின் பக்கம் கொண்டு வந்து, லைனில் ஒரு அதிகாரி இருக்கிறார். தங்களுடன் பேச வேண்டுமாம் என்று கூறியுள்ளார். அப்போது போன், சித்தராமையாவின் காதில் பட்டு அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

இதனால் சட்டென கோபம் அடைந்த அவர், உதவியாளருக்கு பளார் விட்டு அவரை விரட்டினார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 

கடந்த ஜனவரியில் சித்தராமையா தனது மகன் யஷீந்திராவின் தொகுதியான வருணா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அங்கு மக்களை சந்தித்த அவர், குறைகளை கேட்டார். அப்போது, கூட்ட பச்சை நிற ஆடை அணிந்த பெண் ஒருவர், அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வான சித்தராமையாவின் மகனை தேர்தலின் போது மட்டுமே பார்த்ததாக குற்றம்சாட்டினார்.

இதனால், கோபமடைந்த சித்தராமையா, அந்தப் பெண்ணிடம் இருந்த மைக்கை, ஆவேசத்துடன் பறித்து அதட்டி உட்கார வைத்தார். அப்போது, மைக் உடன் அந்த பெண்ணின் துப்பட்டாவும் அவரது  கையோடு வந்தது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

முன்கோபக்காரராக பார்க்கப்படும் சித்தராமையா அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். 



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................