This Article is From Nov 11, 2018

வேலை வாங்கி தருவதாக மோசடி: முன்னாள் ராணுவ அதிகாரி கைது!

ஒவ்வொருவரிடமும் 6 லட்சத்தை வாங்கிக் கொண்டு போலியான பணி நியமன ஆணையத்தை வழங்கியுள்ளார்.

வேலை வாங்கி தருவதாக மோசடி: முன்னாள் ராணுவ அதிகாரி கைது!

பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ அதிகாரியை மும்பை போலீசார் கைது செய்தனர்.

Mumbai:

மும்பை குற்றவியல் தடுப்பு போலீசார் சனிக்கிழமையன்று ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சத்தை மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரரை கைது செய்துள்ளனர். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான திருநேத்ரா விசாகப்பட்டினத்தில் சரஸ்வதி அகாடமி நடத்தி வருகிறார்.

அவர் ஒருசிலரிடம் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார். திருநேத்ராவின் அகாடமியில் படித்து வந்த ஆறு மாணவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்பு இம்மோசடி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், திருநேத்ரா ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ. 6 லட்சத்தை வாங்கிக் கொண்டு போலியான பணி நியமன ஆணையத்தை வழங்கியுள்ளார். மோசடி மற்றும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதற்காக மும்பை போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஹைதராபாத் டாஸ்க் ஃபோர்ஸ் பிரிவினர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட டிராவல் ஏஜென்ட்டை கைது செய்தனர்.

வோசா கங்காதர் என அறியப்பட்ட அந்த நபரிடமிருந்து மூன்று பாஸ்போர்ட், மூன்று ஆதார் மற்றும் இரண்டு பான் கார்டுகளை போலீசார் கைபற்றியுள்ளனர்.

.