‘அதிமுக மீது அதிமுக-வினரே அதிருப்தியில் உள்ளனர்!’- மு.க.ஸ்டாலின் பிரசாரம்

‘ஆளும் அ.தி.மு.க அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, அ.தி.மு.க-வினரே அதிருப்தியில் உள்ளனர்'

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘அதிமுக மீது அதிமுக-வினரே அதிருப்தியில் உள்ளனர்!’- மு.க.ஸ்டாலின் பிரசாரம்

"தமிழகத்தையே தற்போது தண்ணீர் பிரச்னை வாட்டி வதைத்து வருகிறது"


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒட்டபிடாரம் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து, தொகுதிக்குட்பட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ஆளும் அ.தி.மு.க அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, அ.தி.மு.க-வினரே அதிருப்தியில் உள்ளனர்' என்று பிரசாரம் செய்தார். 

தொடர்ந்து அவர், ‘ஆளும் அ.தி.மு.க அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, அ.தி.மு.க-வினரே அதிருப்தியில் உள்ளனர். கட்சி பாகுபாடின்றி ஒட்டுமொத்த மக்களும் ஊழல் அ.தி.மு.க ஆட்சி மீது மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். தற்போது ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க அரசுக்கு, தன்னுடைய ஆட்சியை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பதில் தான் முழு கவனமும் இருக்கிறது. குறைந்தபட்சம் அந்த ஆட்சியை காப்பாற்றிக் கொண்டாவது, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளியும் அவர்களுக்கு இல்லை. 

தமிழகத்தையே தற்போது தண்ணீர் பிரச்னை வாட்டி வதைத்து வருகிறது. ஒட்டப்பிடாரம் தொகுதி மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னையை தீர்க்க திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பீர். திமுக ஆட்சிக்கு வந்தால், நிச்சயமாக மக்களின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பேசினார். 

முன்னதாக ஸ்டாலின், ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட இடங்கள் சிலவற்றில் திண்ணைப் பிரசாரத்திலும் ஈடுபட்டார். பலதரப்பட்ட மக்கள் இடத்திலும் ஸ்டாலின், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................