எத்தியோப்பியா விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்ததை பேரழிவாக அறிவித்த கனடா பிரதமர்

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் நடந்திருக்கும் விபத்து சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் 35 நாடுகளை சேர்ந்தவர்கள்

எத்தியோப்பியா விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்ததை பேரழிவாக அறிவித்த கனடா பிரதமர்

எத்தியோப்பியா விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Montreal, Canada:

எத்தியோப்பியா விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்ததை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேரழிவாக அறிவித்துள்ளார். விபத்தில் கனடாவை சேர்ந்தவர்கள் 18 பேர் உயிரிழந்தனர். 

எத்தியோப்பியா விபத்து குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு மற்றும் அறிக்கைகளில் கூறியிருப்பதாவது-

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடைய துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறோம். எத்தியோப்பியாவில் நடந்திருப்பது பேரழிவு. பல உலக நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த விமான விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களது குடும்பத்தினருடைய துயரத்திலும் நாங்கள் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

Newsbeep

விபத்து குறித்து கென்யா பிரதமர் உகுர கென்யட்டாவிடமும், எத்தியோப்பியா பிரதமர் அபை அகமதுவிடமும் பேசினேன். எனது இரங்கலை அவர்களிடம் தெரிவித்தேன்.
இவ்வாறு ட்ரூடோ கூறியுள்ளார். நேற்று காலை எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து புறப்பட்ட போயிங் 737 ரக விமானம், புறப்பட்ட 6-வது நிமிடத்தில் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர். 

தொழில்நுட்ப கோளாறுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதில் 30-க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவில் இயங்கும் போயிங் விமானங்களின் நிலை குறித்து, விமானப் போக்குவரத்து நிறுவனங்களிடம் மத்திய அரசு விவரங்களை கேட்கவுள்ளது.