This Article is From Feb 16, 2019

ஒட்டுமொத்த நாடும் ஒரே குரலில் சபதம் ஏற்போம்! - அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்

டெல்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ராஜ்நாத்சிங் தலைமை வகித்தார்.

ஹைலைட்ஸ்

  • தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம்.
  • பயங்கரவாதத்திற்கான ஆதரவுக்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
  • புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
New Delhi:

புல்வாமா தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு இன்று கூட்டியது. இதில் கலந்து கொள்ளுமாறு நாடு முழுவதும் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. நிதியமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் புல்வாமா தாக்குதல் தொடர்பான விவரங்களை ராஜ்நாத் சிங் எடுத்துக் கூறினார். எந்த வகையில் பதிலடி கொடுக்கலாம்? என்பது குறித்து அனைத்து கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

 

h4qtqr7s

 

மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் தெரிவித்தனர். பின்னர், இன்றைய கூட்டத்தில் எல்லா வகையிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சவால்களை எதிர்கொண்டு போராடி வெல்ல ஒட்டுமொத்த நாடும் ஒரே குரலில் சபதமேற்கிறோம். அனைத்து வகைகளிலான பயங்கரவாதம் மற்றும் எல்லையின் மறுபகுதியில் இருந்து பயங்கரவாதத்துக்கு அளிக்கப்படும் ஆதரவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க - 80 மீட்டர் தூரத்தில் சிதறிக்கிடந்த வீரர்களின் உடல் – கொடூரத்தனத்தின் உச்சம்

.